அவுஸ்ரேலிய குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான அரசின் சட்டமுன்வடிவிற்கு, செனற் அவை அங்கீகாரம் வழங்கக்கூடாதென அவுஸ்திரேலிய மனித உரிமைக் கமிஷன் தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கு இந்த சட்டமானது பாதகமாக அமையலாம் என கூறப்படுகிறது.
அதனால் அரசின் சட்டமுன்வடிவில், மாற்றங்களைச் செய்வது தொடர்பில், அவுஸ்திரேலிய செனட்டர்கள் ஆலோசிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய மனித உரிமைக் கமிஷன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Permanent Residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி பெறுவர் என்ற தற்போதைய நிபந்தனையை மாற்றியமைக்கப்படுகிறது.
ஒருவர் வதிவிட உரிமையுடன் 4 ஆண்டுகள் நாட்டில் வாழ்ந்திருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும்.
மேலும், ஆங்கிலப்புலமையை நிரூபித்தல், பிற சமூகத்தோடு இணைந்து வாழப் பழகியிருத்தல், அவுஸ்திரேலிய விழுமியங்களை ஏற்றல் போன்ற பல புதிய நிபந்தனைகள் தற்போது அரசு முன்வைக்கும் குடியுரிமைச் சட்ட முன்வடிவில் இடம் பெற்றுள்ளன.
இதனை அடிப்படையாக வைத்து தமது புலமையை நிரூபிக்க முடியாமல் போகலாம் என அவுஸ்திரேலிய மனித உரிமைக் கமிஷன் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலியாவுக்கு புதிதாக குடிபெயர்ந்தவர்களுக்கு பாரிய சிக்கல்களை உருவாக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Eelamurasu Australia Online News Portal