அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று  நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ்சை எதிர்கொள்கிறது. இப்போட்டி நாட்டிங்காம் நகரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்கிறது. ஆரோன் பிஞ்ச் , டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் விவரம் ...

Read More »

இலங்கையில் உலக பயங்கரவாத்தை ஒழிக்க அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு வழங்கும்!

உலக பயங்கரவாத்தை இலங்கையில் இருந்து முழுமையாக ஒழிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம்  முழு ஒத்துழைப்பை வழங்கும் என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் உறுதியளித்துள்ளார். அத்துடன் சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அவுஸ்திரேலியாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும்  அழைப்பு விடுத்தார். அவுஸ்திரேலிய  உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கும்  சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன் போதே மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் மீண்டும் நாட்டை வழமைக்கு திருப்பவும்  உலக பயங்கரவாத்தை  இல்லாதொழிப்பதற்கும்  தேவையான  ...

Read More »

சட்டவிரோத குடிவாசிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது!-அவுஸ்திரேலியா

சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கைகள் முன்னரைப் போன்று தற்போதும் கடுமையானதாகவே காணப்படுவதாகவும், படகுகளின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை வந்தடைவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் எச்சரித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனின் தலைமையில் நேற்றைய தினம் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பில் அவுஸ்திரேலிய எல்லை விவகாரங்களுக்கு பொறுப்பான கொமாண்டர் மேஜர் ஜெனரல் கிரெய்க் பியுரினியால் கடல் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு! நால்வர் பலி!

அவுஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.   அவுஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் ஐரோப்பியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இது தீவிரவாத தாக்குதல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

அவுஸ்திரேலியாவில் இலவச Wi-Fi பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து!

அவுஸ்திரேலியாவில் இலவச Wi-Fi பயன்படுத்துபவர்களை பொலிஸார் கண்காணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இலவச இணைய வசதியை (WiFi) வழங்கும் McDonald’s உணவகம், Westfield பல்பொருள் அங்காடி மற்றும் Apple Stores ஆகியவற்றில் WiFi வசதியை பயன்படுத்துபவர்களின் விபரங்களை அவுஸ்திரேலிய புலனாய்வுப்பிரிவினர் கண்காணிக்கலாம் என கூறப்படுகின்றது. பாதுகாக்கப்பட்ட தொடர்பாடல் (encryption technology) செயலிகளின் தகவல் பரிமாற்றங்களை ஒட்டுக்கேட்பது உட்பட இணைய பாதுகாப்பு தொடர்பில் பல புதிய கண்காணிப்புக்களை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைவான புதிய சட்டத்தின்படி மேற்படி கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Morrison அரசின் காலத்தில் ...

Read More »

நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதிகள்! செய்திகளை மறுக்கும் அமைச்சர்!

அவுஸ்திரேலியா நோக்கி வந்துகொண்டிருந்த 20 இலங்கையர்கள் அண்மையில் நாடு கடத்தப்பட்டனர். இந்த நிலையில் குறித்த அகதிகள் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுவரப்படாமலேயே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்துறை அமைச்சர் Peter Dutton இதனை தெரிவித்துள்ளார். படகில் வந்த 20 இலங்கையர்களை கிறிஸ்மஸ் தீவு முகாமுக்கு கொண்டுவந்து சில நாட்கள் தடுத்துவைத்திருந்த பின்னர் இலங்கைக்கு திருப்பியனுப்பியதாக முன்னர் வெளிவந்த தகவல்களை அமைச்சர் முற்றாக மறுத்தார். அகதிகள் அனைவரும் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டுவரப்படாமலேயே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார். பிறிஸ்பனில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு 208 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவுக்கு ஆப்கானிஸ்தான் அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசியது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய ஆப்கானிஸ்தான் அணியின் முன்கள வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை விரைவில் இழந்தனர். ...

Read More »

அவுஸ்திரேலியாவில் அடுத்த 3 மாதங்களுக்கு ஏற்படவுள்ள மாற்றம்!

அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடலோர வட்டாரத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்குக் கடுமையான வெப்பமும், வறட்சியும் நீடிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அந்த வட்டாரத்தின் விவசாயத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. ஜுன் முதலாம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 30 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை வட்டாரத்தில் முப்பது விழுக்காடு மட்டுமே மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது. அவுஸ்திரேலியா முழுவதும் தற்போது இருப்பதைக் காட்டிலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு அதிக வெப்பமும், வறட்சியும் நீடிக்கும் எனவும், இதனால் ஏற்பட கூடிய ஆபத்துக்களில் ...

Read More »

இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்ற கணவன்!

தனது மனைவியை கொலை செய்த Ahmed Seedat என்ற கணக்காளருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பெர்த் நகரின் Carlisle பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி தனது 32 வயது மனைவியான Fahima Yusuf என்பவரை Ahmed Seedat இரும்புக்கம்பியால் அடித்துக் கொலைசெய்துவிட்டு வீட்டின் பின்புறம் புதைத்திருந்தார். Fahima Yusuf கொலைசெய்யப்பட்ட சமயம் அவர்களது 5 வயது மற்றும் 2 வயதுப் பிள்ளைகள் மற்றைய அறையில் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர். தனது மனைவியைக் கொல்ல வேண்டுமென்பது Ahmed Seedat-இன் நீண்டநாள் ...

Read More »

உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்லும்!

உலக கோப்பையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே நம்பிக்கை தெரிவித்தார். உலக கோப்பை போட்டி குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அளித்த பேட்டியில் கூறியதாவது:- கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படாததால் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி சோபிக்காது என்று பலரும் எழுதுகிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலிய அணி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகிறது. முந்தைய கால ...

Read More »