ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ்சை எதிர்கொள்கிறது.
இப்போட்டி நாட்டிங்காம் நகரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்கிறது. ஆரோன் பிஞ்ச் , டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் விவரம் வருமாறு:
ஆஸ்திரேலியா
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), நாதன் கொல்டர் நைல், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் சாம்பா.
மேற்கிந்திய தீவுகள்
கிறிஸ் கெயில், சாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), எவின் லீவிஸ், சிம்ரோன் ஹெட் மயர், நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லோஸ் பிராத்வெயிட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ்
 Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				