உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவுக்கு ஆப்கானிஸ்தான் அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசியது.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய ஆப்கானிஸ்தான் அணியின் முன்கள வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை விரைவில் இழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் தங்கள் பங்களிப்பை அளித்ததால் அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. எனினும், 38.2 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் அணியின் நஜிபுல்லா ஸத்ரான் 51 ரன்களும், ரஹ்மத் ஷா 43 ரன்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் பேட் கம்மின்ஸ், ஆடம் சம்பா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஸ்டாய்னிஸ் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.
Eelamurasu Australia Online News Portal