இலங்கையில் உலக பயங்கரவாத்தை ஒழிக்க அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு வழங்கும்!

உலக பயங்கரவாத்தை இலங்கையில் இருந்து முழுமையாக ஒழிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம்  முழு ஒத்துழைப்பை வழங்கும் என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அவுஸ்திரேலியாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும்  அழைப்பு விடுத்தார்.

அவுஸ்திரேலிய  உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கும்  சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன் போதே மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் மீண்டும் நாட்டை வழமைக்கு திருப்பவும்  உலக பயங்கரவாத்தை  இல்லாதொழிப்பதற்கும்  தேவையான  சகல உதவிகளையும் பெற்றுக்கொடுக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று  பீடர் டட்டன் பிரதமரிடம் கூறியுள்ளார்.