அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடலோர வட்டாரத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்குக் கடுமையான வெப்பமும், வறட்சியும் நீடிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், அந்த வட்டாரத்தின் விவசாயத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஜுன் முதலாம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 30 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை வட்டாரத்தில் முப்பது விழுக்காடு மட்டுமே மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது.
அவுஸ்திரேலியா முழுவதும் தற்போது இருப்பதைக் காட்டிலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு அதிக வெப்பமும், வறட்சியும் நீடிக்கும் எனவும், இதனால் ஏற்பட கூடிய ஆபத்துக்களில் இருந்து தப்பித்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த நிலை நீடித்தால் அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை வட்டாரத்தின் வேளாண் உற்பத்தியில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகின்றது.
Eelamurasu Australia Online News Portal