அவுஸ்திரேலியமுரசு

குடியேறிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய அரசின் முடிவு

ஆஸ்திரேலிய நிரந்தரமாக வசிக்கும் உரிமைப் பெற்ற குடியேறிகள், அந்நாட்டின் முக்கிய மற்றும் அவசியமான நல உதவிகளைப் பெற நான்காண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்கும் எண்ணம் கொண்ட வெளிநாட்டினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 670 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தும் நடவடிக்கையாக இக்கொள்கையினை ஸ்காட் மாரிசன் தலைமையிலான ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

Read More »

தமிழ் அகதி குடும்பத்தினரின் விசா காலம் மேலும் நீட்டிப்பு

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தினரின் நடப்பு இணைப்பு விசாக்கள் காலாவதியாக இருந்த நிலையில், அவர்களது விசா காலம் மேலும் 3 மாதக் காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் இதுதொடர்பான கொள்கை முடிவினை எடுத்துள்ளதாக அக்குடும்ப வழக்கறிஞர்களிடம் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

Read More »

ஆஸ்திரேலியக் குடியுரிமை விதிகளில் மாற்றம் அறிமுகம்

சில திறமைசாலிகள் குடியுரிமை பெறுவதிலுள்ள சில நடைமுறை சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் வகையில், குடியுரிமை விதிகளில் சில மாற்றங்களை குடியேற்றம், குடியுரிமை, புலம்பெயர்ந்தோர் சேவைகள் மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர், Alex Hawke நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார். “ஆஸ்திரேலிய குடியுரிமை ஒரு அரிய சலுகை.  அது எளிதில் கிடைக்கக்கூடியதொன்றல்ல.  விண்ணப்ப தாரர்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.  நற்குணம் படைத்தவர்களாக (character) அவர்கள் இருக்க வேண்டும், அற நெறி கொண்டவர்களாக (values) அவர்கள் இருக்க வேண்டும், அத்துடன் ஆங்கில மொழி தெரிந்தவர்களாக இருக்க ...

Read More »

ஆஸ்திரேலியா: Australian Capital Territory -யில் மூன்றாவது தடவை முடக்க நிலை நீட்டிப்பு

ஆஸ்திரேலியாவின் New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,127 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் இருவர் இறந்துள்ளார்கள். Covid-19 கட்டுப்பாடுகள் காரணமாக அதிகம் பாதிப்படைந்துள்ள கலாச்சாரம் மற்றும் மொழி ரீதியாக வேறுபட்ட குழுக்கள், சமூகங்கள் மற்றும் தொழிலாளர்கள் என ஆதரவு கொடுப்பனவுகள் பெற தகுதியானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Australian Capital Territory-யில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 22 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ACTயில் முடக்க நிலை மேலும் நான்கு வாரங்கள் நீட்டிக்கப் பட்டுள்ளது. ஒரே ...

Read More »

அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் காவலாளிக்கு கோவிட் தொற்று!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் உள்ள காவலாளிக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ள தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, குடிவரவுத் தடுப்பில் உள்ளவர்களை விடுவிக்கமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. காவலாளிக்கும் தடுப்பில் உள்ளவர்களுக்கும் தொடர்பில்லை என சொல்லப்பட்டு வந்த நிலையில், மற்றொரு காவலாளிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதைத்தொடர்ந்து 35 முதல் 45 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அகதிகள் நல வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதே சமயம், இந்த தகவல் குறித்து அவுஸ்திரேலியா எல்லைப்படை இதுவரை எவ்வித பதிலையும் தெரிவிக்கவில்லை.தடுப்பு முகாம்களில் உள்ள பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களுக்காக கடல் கடந்த ...

Read More »

பெண்கள் கிரிக்கெட்டை தடை செய்தால்… ஆப்கானிஸ்தானை எச்சரிக்கும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி நவம்பர் 27-ந் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபர்ட்டில் தொடங்குகிறது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. நேற்று முன்தினம் புதிய அரசின் விவரம் அறிவிக்கப்பட்டது. தலிபான் அரசு பொறுப்பேற்றவுடன் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தலிபான் கலாச்சார கமி‌ஷன் துணைத்தலைவர் வாசிக் கூறும்போது, ‘ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியின் கீழ் பெண்கள் கிரிக்கெட் மட்டுமின்றி வேறு எந்த விளையாட்டுக்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்’. ...

Read More »

தமிழ் அகதி தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்து

ஆஸ்திரேலியா: தமிழ் அகதி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அக்குடும்பத்தின் ஆஸ்திரேலிய ஆதரவாளர்கள் ஆஸ்திரேலியாவில் நாடுகடத்தல் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள தமிழ் அகதிகளான பிரியா- நடேசலிங்கம் மற்றும் அவர்களது இரு குழந்தைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் Bring Priya, Nades and their girls home to Biloela எனும் சமூகக்குழு ‘பிரியா- நடேசலிங்கம்’ தம்பதியினரின் 8வது திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. ‘இத்தமிழ் அகதி குடும்பம் அச்சுறுத்தல் மிகுந்த இலங்கைக்கு நாடுகடத்தப்படக்கூடாது, அவர்கள் ஆஸ்திரேலியாவிலேயே நிரந்தரமாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும்’ என்பது அக்குழுவின் கோரிக்கையாக உள்ளது. ...

Read More »

ஆஸ்திரேலியாவில் பரிதவிக்கும் ஆப்கானிய குடும்பம்!

தாலிபான் கட்டுப்பாட்டு ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள மகன்: ஆஸ்திரேலியாவில் பரிதவிக்கும் ஆப்கானிய குடும்பம் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஆப்கானிய குடும்பம் ஒன்று தங்கள் 17 வயது மகன் தாலிபான் கட்டுப்பாட்டு ஆப்கானிஸ்தானில் சிக்கி உள்ளதாகவும் தாலிபான் படையினரால் சிறுவனின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என அச்சம் தெரிவித்துள்ளது. “அவன் காபூலில் தன்னந்தனியாக இருக்கிறான். காபூலை தாலிபான் கைப்பற்றியதால் மிகுந்த கவலையுடனும் அச்சத்துடனும் இருக்கிறான். தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனத் தெரிவித்திருக்கிறோம்,” என கார்டியன் ஊடகத்திடம் அவரது தந்தை கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானை விட்டு ஆஸ்திரேலிய ...

Read More »

தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் போராட்டம்

இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்கமாறு ஆஸ்திரேலிய அரசினை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருக்கின்றனர்.

Read More »

தொற்றுள்ளவர் எண்ணிக்கையில் NSW மீண்டும் உச்சம்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,431 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் 12 பேர் மரணமடைந்துள்ளனர். வரும் நாட்களில் தொற்றுள்ளவர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என Premier Berejiklian எச்சரித்தார். தொற்று கண்ட 979 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 160 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்கள். 63 பேருக்கு சுவாசக் கருவிகள் தேவைப்படுகிறது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கும் என மாநில சுகாதார அதிகாரிகள் அஞ்சுகிறார்கள்.

Read More »