ஆஸ்திரேலியாவின் New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,127 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் இருவர் இறந்துள்ளார்கள்.
Covid-19 கட்டுப்பாடுகள் காரணமாக அதிகம் பாதிப்படைந்துள்ள கலாச்சாரம் மற்றும் மொழி ரீதியாக வேறுபட்ட குழுக்கள், சமூகங்கள் மற்றும் தொழிலாளர்கள் என ஆதரவு கொடுப்பனவுகள் பெற தகுதியானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Australian Capital Territory-யில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 22 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
ACTயில் முடக்க நிலை மேலும் நான்கு வாரங்கள் நீட்டிக்கப் பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஐந்து பேர் அல்லது நான்கு சதுர மீட்டருக்கு ஒரு நபர் என்ற கணக்கில் வணிக இடங்களுக்குள் அனுமதிப்பது என்பது உட்பட, கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.
Eelamurasu Australia Online News Portal