ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தினரின் நடப்பு இணைப்பு விசாக்கள் காலாவதியாக இருந்த நிலையில், அவர்களது விசா காலம் மேலும் 3 மாதக் காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் இதுதொடர்பான கொள்கை முடிவினை எடுத்துள்ளதாக அக்குடும்ப வழக்கறிஞர்களிடம் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.