அவுஸ்திரேலியாவில் கடந்த வருடம் இலங்கை மாணவி விபத்தின் காரணமாக உயிரிழப்பதற்கு காரணமான நபருக்கு நீதிமன்றம் பத்து வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது. மொனால் பல்கலைகழகத்தில் கல்விகற்ற நிசாலி பெரேரா வெலிங்டன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் உயிரிழந்தார். இன்றைய நீதிமன்ற அமர்வில் இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி லிஸ் கையினர் விபத்துக்கு காரணமான சேன் கொச்ரனே என்ற நபர் நிசாலியின் குடும்பத்தை நிரந்தரமாக சிதைத்துவிட்டார் என தெரிவித்துள்ளார். மிகவும் நேசிக்கப்பட்ட ஒரேயொரு மகளின் மரணத்திற்கு காரணமாகிவிட்டீர்கள் என சேன் ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
நியுசிலாந்து பிரஜைகளுக்கு அவுஸ்திரேலியால் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை தளர்வு!
நியுசிலாந்து பிரஜைகளுக்கு அவுஸ்திரேலியால் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கடடுப்பாட்டு நடவடிக்கையாக பல்வேறு நாடுகள் பயணத்தடை விதித்திருந்தது. இந்த நிலையில் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்துள்ளதன் காரணமாக பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Read More »அவுஸ்திரேலியாவில் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு!
அவுஸ்திரேலியாவில் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டதாகக் கருதப்படும் குகை ஓவியங்களை அந் நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாராடைல் மலைப்பகுதியில் ஆய்வு செய்தபோதே 572 ஓவியங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றில் கங்காரு, கடல் பசு மற்றும் சிபிலிஸ் எனப்படும் மிகச்சிறிய எலி இனம் போன்றவை தத்ரூபமாக வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாலிவாவா குகை ஓவியங்கள் எனப்படும் இவ்வகை ஓவியங்களை அவுஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களான அபாரிஜின்கள் வரைந்ததாகவும், இவை சுமார் 6000முதல் 9400 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டவையாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More »ஆஸ்திரேலியா: விக்டோரியா மாநிலத்தில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் குறைந்துள்ளன!
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் புதிதாகக் கிருமித்தொற்று உறுதியானோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. அங்குப் புதிதாக 13 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானதாகவும் நால்வர் மாண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 14 நாள்களாக மெல்பர்னிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிருமிப்பரவல் குறைந்துவருவதாக அவர்கள் குறிப்பிட்டனர். மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் (Daniel Andrews) அதன் தொடர்பில் செய்தியாளர் கூட்டம் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாத மத்தியில் மாநிலத்தில் COVID-19 தொடர்பான வழக்கநிலையை உறுதிசெய்வதற்கான முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
Read More »ஆஸ்திரேலிய முகாம்களில் அலைப்பேசிகளை தடைச்செய்யும் மசோதா
ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்கள் அலைப்பேசி பயன்பாட்டை தடைச்செய்வது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசால் முன்மொழியப்பட்ட புலம்பெயர்வு திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு ஆஸ்திரேலிய மேலவையில் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், இம்மசோதா முன்மொழியும் அலைப்பேசி தடை கனடா மற்றும் இன்னும் பிற நாடுகளில் மீள்குடியேற முயற்சிக்கும் அகதிகளுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது அகதிகள் மேலும் கூடுதலான காலம் தடுத்து வைக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் இதனால் ஆஸ்திரேலிய வரிப்பணம் பல மில்லியன்கள் செலவாகக்கூடும் என Ads-Up Refugee Network அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. ...
Read More »சவுதி அரேபியா வழியில் ஆஸ்திரேலியா: அகதிகள் விவகாரத்தில் எழுந்துள்ள விமர்சனம்
ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சோதனை நடத்தவும் அலைப்பேசிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்வதற்கான கூடுதல் அதிகாரத்தை ஆஸ்திரேலிய எல்லைப்படைக்கு வழங்கும் விதமாகவும் புதிய மசோதாவை ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்களில் அலைப்பேசிகளை தடைச் செய்ய அனுமதிக்கும் இந்த மசோதாவுக்கு ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள சவுதி அரேபியா பத்திரிக்கையாளர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசா பெற்று வசிக்கும் சுல்தான் எனும் சவுதி அரேபியர், ஆஸ்திரேலியாவில் இந்த முயற்சி சவுதி அரேபியா போன்றே உள்ளதாகக் கவலைத் தெரிவித்துள்ளார். சவுதியில் ...
Read More »மெல்பர்ன் நகரில் திட்டமிட்டதற்கு முன்பாகவே, கிருமிப் பரவல் தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்தப் பரிசீலனை
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் திட்டமிட்டதற்கு முன்பாகவே, கிருமிப் பரவல் தொடர்பான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்துவருகின்றனர். சனிக்கிழமை 26ஆம் தேதியிலிருந்து அவை நடப்புக்கு வரலாம் என்று விக்டோரியா மாநில ஆளுநர் தெரிவித்தார். கடந்த 2 வாரங்களில் புதிதாகக் கிருமித்தொற்று உறுதியாவோரின் சராசரி எண்ணிக்கை 30ஆகக் குறைந்திருப்பதை அவர் சுட்டினார். ஆஸ்திரேலியாவில் இரண்டாம் கட்டக் கிருமிப் பரவல் அதிகரித்தபோது, மெல்பர்ன் நகரே அதிகம் பாதிக்கப்பட்டது. கடந்த மாதம் இரண்டாம் தேதியிலிருந்து, அந்த நகரில் கடுமையான முடக்கநிலை நடப்பில் உள்ளது.
Read More »ஆஸ்திரேலிய கடற்கரையில் உயிரிழந்த திமிங்கலங்களின் எண்ணிக்கை 380 ஆக உயர்வு
ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய திமிங்கலங்களின் எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு கடற்கரையான டாஸ்மானியாவில் 460 பைலட் திமிங்கலங்கள் கடந்த 21-ம் தேதி திடீரென கரை ஒதுங்கின. பல திமிங்கலங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீண்டும் கடலுக்கு செல்ல முடியாமல் தத்தளித்து வந்தன. தகவல் அறிந்து திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய பகுதிக்கு விரைந்து சென்ற அரசு ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்கள் பலர் திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் விட முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மேற்கொண்டு ...
Read More »ஆஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் வேறு நாடுகளுக்கு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்!
நவுருத்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் சிறைவைக்கப்பட்டிருந்த 10 அகதிகள் அமெரிக்கா மற்றும் நார்வேவில் மீள்குடியமர்த்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 9 அகதிகள் அமெரிக்காவிலும் 1 அகதி நார்வேயிலும் மீள்குடியமர்த்தப்பட இருக்கின்றனர். அதே சமயம், நவுருதீவில் மேலும் 160 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் 8 ஆண்டுகள் அத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பப்பு நியூ கினியா தீவிலும் ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பிற்கான மாற்று இடங்களிலும் பல அகதிகள் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கின்றனர். அமெரிக்கா- ஆஸ்திரேலியா ...
Read More »ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் செத்து ஒதுங்கிய 25 திமிங்கலம்- 270 போராட்டம்
ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் 25 பைலட் திமிங்கலங்கள் செத்து ஒதுங்கிய நிலையில், 270 உயிருக்கு போராடி கொண்டு இருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு கடற்கரையான டாஸ்மானியாவில் 300-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கின. தகவல் அறிந்த அரசு ஆராய்ச்சியாளர்கள். இந்த திமிங்கலங்களை கடலுக்குள் விட முயற்சி செய்து வருகின்றனர். அதில் 25 திமிங்கலங்கள் உயிரிழந்துவிட்டன. 270 உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு திமிங்கலமும் 7 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 3 டன் எடை கொண்டதாகவும் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும், டாஸ்மானியா ...
Read More »