அவுஸ்திரேலியாவில் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டதாகக் கருதப்படும் குகை ஓவியங்களை அந் நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பாராடைல் மலைப்பகுதியில் ஆய்வு செய்தபோதே 572 ஓவியங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இவற்றில் கங்காரு, கடல் பசு மற்றும் சிபிலிஸ் எனப்படும் மிகச்சிறிய எலி இனம் போன்றவை தத்ரூபமாக வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாலிவாவா குகை ஓவியங்கள் எனப்படும் இவ்வகை ஓவியங்களை அவுஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களான அபாரிஜின்கள் வரைந்ததாகவும், இவை சுமார் 6000முதல் 9400 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டவையாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal