ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் திட்டமிட்டதற்கு முன்பாகவே, கிருமிப் பரவல் தொடர்பான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்துவருகின்றனர்.
சனிக்கிழமை 26ஆம் தேதியிலிருந்து அவை நடப்புக்கு வரலாம் என்று விக்டோரியா மாநில ஆளுநர் தெரிவித்தார்.
கடந்த 2 வாரங்களில் புதிதாகக் கிருமித்தொற்று உறுதியாவோரின் சராசரி எண்ணிக்கை 30ஆகக் குறைந்திருப்பதை அவர் சுட்டினார்.
ஆஸ்திரேலியாவில் இரண்டாம் கட்டக் கிருமிப் பரவல் அதிகரித்தபோது, மெல்பர்ன் நகரே அதிகம் பாதிக்கப்பட்டது.
கடந்த மாதம் இரண்டாம் தேதியிலிருந்து, அந்த நகரில் கடுமையான முடக்கநிலை நடப்பில் உள்ளது.