ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் புதிதாகக் கிருமித்தொற்று உறுதியானோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது.
அங்குப் புதிதாக 13 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானதாகவும் நால்வர் மாண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 14 நாள்களாக மெல்பர்னிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிருமிப்பரவல் குறைந்துவருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் (Daniel Andrews) அதன் தொடர்பில் செய்தியாளர் கூட்டம் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாத மத்தியில் மாநிலத்தில் COVID-19 தொடர்பான வழக்கநிலையை உறுதிசெய்வதற்கான முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
Eelamurasu Australia Online News Portal