அவுஸ்திரேலியாவில் இலங்கைமாணவி விபத்தின் மூலம் உயிரிழப்பதற்கு காரணமான நபருக்கு பத்து வருட சிறை

அவுஸ்திரேலியாவில் கடந்த வருடம் இலங்கை மாணவி விபத்தின் காரணமாக உயிரிழப்பதற்கு காரணமான நபருக்கு நீதிமன்றம் பத்து வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

மொனால் பல்கலைகழகத்தில் கல்விகற்ற நிசாலி பெரேரா வெலிங்டன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் உயிரிழந்தார்.

இன்றைய நீதிமன்ற அமர்வில் இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி லிஸ் கையினர் விபத்துக்கு காரணமான சேன் கொச்ரனே என்ற நபர் நிசாலியின் குடும்பத்தை நிரந்தரமாக சிதைத்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.

மிகவும் நேசிக்கப்பட்ட ஒரேயொரு மகளின் மரணத்திற்கு காரணமாகிவிட்டீர்கள் என சேன் கொச்ரனேயிடம்நீதிபதி தெரிவித்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு நீங்கள் தப்பியோடிய இது மூன்றாவதுதடவை,இம்முறை நீங்கள் கொலை செய்த இளம் பெண்ணின் உடலை விட்டுவிட்டுதப்பியோடியுள்ளீர்கள் என நீதிபதி தெரிவித்துள்ளார்.


வெலிங்டன் வீதியில் 12 செகன்ட்கள் சிவப்புவிளக்கு எரிந்துகொண்டிருந்தவேளை நிமாலி மஞ்சள்கோட்டினை பயன்படுத்தியவேளை இந்த விபத்து இடம்பெற்றது அவர் 60 மீற்றர் தூரத்திற்கு தூக்கிஎறியப்பட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தார் என்ற தகவல் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளது.

வாகனத்தால் மோதிய நபர் அங்கிருந்து தப்பியோடினார் காரை கைவிட்டார் பின்னர் அந்த கார் தேவாலயமொன்றில் மீட்கப்பட்டது என நீதிமன்றத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்திற்கு காரணமான நபர் 16 வயதிலேயே போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் அவர் ஏற்கனவே பல குற்றங்களுக்காக 30தடவைகளுக்கு மேல் நீதிமன்றம் சென்றவர் என்ற தகவலும் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளது.