ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் 25 பைலட் திமிங்கலங்கள் செத்து ஒதுங்கிய நிலையில், 270 உயிருக்கு போராடி கொண்டு இருக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு கடற்கரையான டாஸ்மானியாவில் 300-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கின. தகவல் அறிந்த அரசு ஆராய்ச்சியாளர்கள். இந்த திமிங்கலங்களை கடலுக்குள் விட முயற்சி செய்து வருகின்றனர்.
அதில் 25 திமிங்கலங்கள் உயிரிழந்துவிட்டன. 270 உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு திமிங்கலமும் 7 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 3 டன் எடை கொண்டதாகவும் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், டாஸ்மானியா கடற்கரையில் இதுபோன்று ஒதுங்குவது அசாதாரணமானது அல்ல. ஆனால் இந்த அளவில் ஒதுங்கியது எதிர்பார்க்காதது. கடந்த 10 ஆண்டுகளில் கரை ஒதுங்கியது கிடையாது என்று தெரிவித்தனர்.
Eelamurasu Australia Online News Portal