அவுஸ்திரேலியமுரசு

கடல் கடந்த தடுப்பு முகாம்களை மூடுங்கள்: ஆஸ்திரேலியாவுக்கு சீனா வலியுறுத்தல்

ஆஸ்திரேலிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடல் கடந்த தடுப்பு முகாம்களின் செயல்பாடு குறித்து கவலைத் தெரிவித்துள்ள சீனா, அம்முகாம்களை உடனடியாக மூடக்கோரி வலியுறுத்தியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு சீன நிறுவனமான ஹூவாயின் 5G தொலைத்தொடர்பை சேவையை வெளிப்படையாக ஆஸ்திரேலிய அரசு தடைசெய்ததை அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் சீனா இடையிலான உறவில் முறுகல் நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கொரோனா கிருமித்தொற்றின் மூலத்தைக் குறித்து அறிய விசாரணை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலிய வலியுறுத்தியதும் ஆஸ்திரேலியா- சீனா உறவைப் பாதித்தாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில், ...

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈரானிய அகதியின் கதை

ஈரானிய அகதியான Ebrahim Obeiszade கடைசியாக பணியாற்றி 8 ஆண்டுகள் கடந்து விட்டன. தெற்கு ஈரானில் உள்ள சர்க்கரை ஆலையில் பணியாற்றிய அவரின் வாழ்க்கை இன்று ஆஸ்திரேலியாவில் வேறொரு கோணத்தில் உள்ளது. ஈரானில் அரசியல் ரீதியாக ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழல் காரணமாக ஆஸ்திரேலியாவை நோக்கி கடல் பயணத்தை மேற்கொண்ட அவர், கடந்த 8 ஆண்டுகளை தடுப்பு முகாம்களிலேயே/தடுப்பிலேயே கழித்திருக்கிறார். இவ்வாறான அகதிகள் தொடர்பாக ஆஸ்திரேலிய அரசிடம் ஏற்பட்ட திடீர் எண்ண மாற்றத்தால் இவர் 6 மாத தற்காலிக விசாவில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். முன்னதாக, கடந்த ஜூலை ...

Read More »

அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்களின“ நிலை என்ன?

கடந்த மார்ச் 1ம் திகதி, தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஆஸ்திரேலியாவின் கங்காரூ பாய்ண்ட் ஹோட்டலிலிருந்தும் பிரிஸ்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமிலிருந்தும் 25 அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அந்த வகையில், கடந்த ஜனவரி 20ம் திகதி முதல் இதுவரை 115 அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்றதாக சுமார் 8 ஆண்டுகளாக கடல் கடந்த தடுப்பிலும் ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களிலும் சிறைவைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அகதிகள் பல ஆண்டுகள் கழித்து விடுவித்துள்ளமை குறித்த ...

Read More »

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. ஆஸ்திரேலிய அணியில் டேனியல் சாம்ஸ்க்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் அறிமுக வீரராக இடம் பிடித்தார். அவர் இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டிக்கு பஞ்சாப் கிங்ஸ் ...

Read More »

ஆஸ்திரேலியா: குடும்ப விசா வழங்குவதில் தொடரும் தாமதம்

ஆஸ்திரேலியாவின் குடும்ப மீள் ஒன்றிணைவு மற்றும் இணையர் விசா வழங்கும் முறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் அதை ஆஸ்திரேலியா செனட் சபை உட்படுத்த இருக்கிறது. இந்த விசாரணையில், இவ்விசா முறையில் ஏற்படும் விசா வழங்க ஏற்படும் தாமதம், பாகுபாடு உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து விசாரிக்கப்பட இருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகமான எஸ்பிஎஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. “நமது குடும்ப விசா வழங்கும் முறை சீர்குலைந்து கிடக்கிறது. ஆஸ்திரேலியாவில் தங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்ட பலரை அது ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது,” எனத் ...

Read More »

ஆஸ்திரேலிய அகதிகள் கொள்கையினால் நிகழ்ந்த உயிரிழப்பு

அண்மையில், ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த அகமது முகமது எனும் சோமாலிய அகதி முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பொழுது அவரது காலில் தோட்டாவை சுமந்து கொண்டிருந்தார். ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அவர் ஆஸ்திரேலியாவின் படகுக் கொள்கையினால் பல ஆண்டுகள் மனுஸ்தீவிலும் நவுருத்தீவிலும் உள்ள தடுப்பில் இருக்க வேண்டி வந்தது. நவுருத்தீவில் இருந்த பொழுது அவருக்கு ஏற்பட்ட இதயப்பிரச்னை இறுதியில் அவர் ஆஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட்ட போதிலும் அவரது உயிரைப் பறித்து விட்டது. ஆம், அவர் தனது 39வது பிறந்தநாளுக்கு அடுத்த நாளே இதயப்பிரச்னையில் உயிரிழந்து ...

Read More »

சமூக வலைத்தளங்கள் செய்திக்கு பணம் செலுத்த ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் சமூக வலைத்தளங்கள் செய்திகளுக்காக பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வகை செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியிடுவதற்கு பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் தர வகை செய்து ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேஸ்புக் நிறுவனம், தனது வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட கடந்த வாரம் திடீரென தடை விதித்தது. இதனால் இந்த தளத்தில் செய்திகளை வாசித்து வந்த ஆஸ்திரேலியர்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். பேஸ்புக்கின் இந்த செயலுக்கு அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் ...

Read More »

அவுஸ்ரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த தடையை விலக்கிக்கொள்வதாக முகநூல் நிறுவனம் அறிவிப்பு

ஊடக விதிகளை திருத்தி அமைக்க அவுஸ்ரேலிய அரசு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவுஸ்ரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த சர்ச்சைக்குரிய தடையை விலக்கிக்கொள்ளப்போவதாக முகநூல்  நிறுவனம் அறிவித்துள்ளது. முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு முகநூல் நிறுவனம் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது சட்டபூர்வ கட்டாயம் என்ற அவுஸ்ரேலிய அரசின் விதிகளுக்கு முகநூல் கடும் எதிர்ப்பு தெரிவித்து தடை நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்த நிலையில் இருதரப்பும் பேசி சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளதால், பொதுநலன் சார்ந்த ஊடக செய்திகள் இனிமுகநூலில்  வெளியாகும் என அதன் அவுஸ்ரேலிய ...

Read More »

மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலியாவில் நாளை முதல் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவில்  கொரோனா வைரசால் இதுவரை 28,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 909 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன. அதேசமயம் தடுப்பூசி திட்டத்தை தொடங்குவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாகவும், கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பாக மக்களிடையே நிலவும் அச்ச உணர்வை ...

Read More »

ஆஸ்திரேலிய ஓபனில் அசத்திய ஒசாகா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இந்த ஆண்டில் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் 3-ம் தரநிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகாவும், அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடியும் பலப்பரீட்சை நடத்தினர். ஒசாகா அரையிறுதியில் 23 பட்டம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். அத்துடன், மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் ...

Read More »