அவுஸ்திரேலியாவில் எரித்துக் கொல்லப்பட்ட இந்தியா வம்சாவளியை சேர்ந்த பேருந்து ஓட்டுநருக்காக பிரிஸ்பேன் நகர துணை மேயர் விம்மி விம்மி அழுது இரங்கலை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ வைத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் சில தினங்களுக்கு முன் இந்தியா வம்சாவளியை சேர்ந்த 29 வயது Manmeet Alisher என்ற பேருந்து ஓட்டுநர் பயணிகளுக்கு முன்னிலையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், Manmeet Alisher இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் பிரிஸ்பேன் நகர்மன்றத்தில் ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
அவுஸ்ரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா அணி திணறல்
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலியா வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா அணி திணறி வருகிறது. டுபெலிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா சென்றுள்ளது. அவுஸ்ரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இன்று தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா அணியில் புதுமுக வீரர் கேசவ் மகராஜ் இடம் பெற்றார். சுழற்பந்து வீரரான அவருக்கு 26 வயதாகிறது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்பிரிக்கா அணி ...
Read More »தென் சீனக் கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கை -ஆராயும் அவுஸ்ரேலியா
அவுஸ்ரேலியா, இந்தோனேசியாவுடன் இணைந்து, சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராய்ந்துவருகிறது. கடந்த வாரம் இந்தோனேசிய அதிகாரிகளுடனான சந்திப்புகளில் அது குறித்து பேசப்பட்டதாக அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் ஜுலி பிஷப் கூறினார். கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தக்கூடிய வாய்ப்புகள் பற்றி ஆராயவிருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தென் சீனக் கடலிலும், சூலு (Sulu) கடலிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை நடத்துவது அவற்றுள் அடங்கும். அவுஸ்ரேலியாவுடன், அமைதிச் சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்வது குறித்து தாம் பரிந்துரைத்திருப்பதாய் இந்தோனேசியத் தற்காப்பு அமைச்சர் கூறியதாக சிட்னி மார்னிங் ...
Read More »அவுஸ்ரேலியா -தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் பெர்த்தில் நாளை தொடங்குகிறது
அவுஸ்ரேலியா- தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நாளை தொடங்குகிறது. அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. காயத்தால் டிவில்லியர்ஸ் ஓய்வு எடுப்பதால் தென்ஆப்பிரிக்க அணியை பாப் டு பிளிஸ்சிஸ் வழிநடத்துகிறார். தென்ஆப்பிரிக்கா- அவுஸ்ரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளம் என்று வர்ணிக்கப்படும் பெர்த்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தென்ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் ...
Read More »அவுஸ்ரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களே! வீரர்களின் விபரங்களை பதிவு செய்க!
தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்துப் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் அவுஸ்ரேலிய நாட்டிலும், 2016ம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்ரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். இதுவரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் விபரப்பட்டியலில் இல்லாத, மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக அண்மையில் குடிபுகுந்தவர்கள் தயவு ...
Read More »வேகநடைப் போட்டியில் தங்கம்- 92 வயதான இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி அசத்தல்
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வேகநடைப் போட்டியில் முதல் முறையாக 92 வயதான இந்திய கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 90 முதல் 95 வயதுக்குட்பட்டோருக்கான 5000 மீட்டர் வேகநடைப் போட்டியும் ஒன்று. இதில், இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான ஸ்ரீராமுலு (விசாகப்பட்டினம்) கலந்துகொண்டு தங்கம் வென்றார். மேலும், இந்த வாரம் நடைபெற உள்ள 10 கி.மீ. மற்றும் 20 கி.மீ. வேகநடைப் பந்தயங்களிலும் ...
Read More »தற்கொலை செய்ய நினைத்தேன்- அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்
ஓய்வு மற்றும் திருமண முறிவு போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியதாக அவுஸ்ரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக். 2003 மற்றும் 2007ல் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இவர் முக்கிய பங்குவகித்தார். 2007-08ல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற இவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சுவாரஸ்யமாக தொகுத்து சுயசரிதை புத்தகத்தை நேற்று (31) வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ...
Read More »அவுஸ்திரேலியாவில் கஞ்சா வளர்க்க அனுமதி
கஞ்சாச் செடியை வளர்ப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம், பொறுப்பான அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. கஞ்சா இறக்குமதிக்குப் பதிலாக அதை உள்ளூரிலே தயாரிப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் அந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. போதைப் பொருள் சட்டத்தின் அண்மைய திருத்தம் கடந்த மாதம் செய்யப்பட்டது. அறிவியல், மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாச் செடியை வளர்ப்பதற்குச் சட்டம் அனுமதிக்கிறது. கஞ்சாவை மருந்தாக உட்கொள்கிறவர்கள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதில் சவால்களை எதிர்நோக்குவதாக அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சு தெரிவித்தது. சட்டத்தில் ஏற்பட்டுள்ள திருத்தத்தால் கஞ்சாவின் மருத்துவ பயன்பாடு மேலும் சுலபமாகுதம் என்று அமைச்சு சொன்னது.
Read More »சரவாக் பூங்காவில் காணாமல் போன அவுஸ்ரேலியர்
சரவாக்கிலுள்ள பிரபல மூலூ தேசியப் பூங்காவில் காணாமல்போனஅவுஸ்ரேலிய சுற்றுப்பயணிக்கான தேடல் தொடர்ந்து நடைபெறுகிறது. 28 வயது ஆண்ட்ரூ காஸ்கெட் நான்கு நாட்களுக்கு முன் காணாமல் போனார். அந்தப் பூங்காவிற்குள் அவர் தனியாகச் சென்றிருந்ததாகத் தெரியவந்தது. பூங்காவிற்குள் அவர் கடந்து சென்ற பாதையைப் பற்றிய விவரம் தெரியவில்லை. குகைகள், பூமிக்கு அடியிலுள்ள ஆறுகள், மலைப்பகுதிகள், கூர்மையான சுண்ணாம்புக் கற்கள் ஆகியவை அந்த பூங்காவில் உள்ளன. நேற்று தேடல், மீட்புக் குழுவைச் சேர்ந்த சுமார் 40 பேர், மூலூ மலைச்சிகரம், புக்கிட் சுசு, ரேசர்ஸ் குகை ஆகிய ...
Read More »அவுஸ்ரேலியாவில் தீபாவளி கொண்டாடிய இந்தியர்கள்
அவுஸ்ரேலியா நாட்டில் தீபாவளி திருநாளை அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் ஆடல் பாடலுடன் வெகுவிமர்சையாக கொண்டாடினர். அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள இந்திய சமூகங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி தீபாவளி திருநாளை கொண்டாடினார்கள். செயின்ட் ஜார்ஜ் சதுக்கத்தில் நடைபெற்ற விழாவில் இந்தியர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டு மகிழ்ந்தனர். முன்னதாக மேளதாளம் முழங்க பெண்கள் தீபங்கள் ஏந்தியபடியே விருந்தினர்களை அழைத்து வந்தனர். இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய கலையான சிலம்பம், ...
Read More »