அவுஸ்ரேலியா, இந்தோனேசியாவுடன் இணைந்து, சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராய்ந்துவருகிறது. கடந்த வாரம் இந்தோனேசிய அதிகாரிகளுடனான சந்திப்புகளில் அது குறித்து பேசப்பட்டதாக அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் ஜுலி பிஷப் கூறினார்.
கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தக்கூடிய வாய்ப்புகள் பற்றி ஆராயவிருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தென் சீனக் கடலிலும், சூலு (Sulu) கடலிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை நடத்துவது அவற்றுள் அடங்கும்.
அவுஸ்ரேலியாவுடன், அமைதிச் சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்வது குறித்து தாம் பரிந்துரைத்திருப்பதாய் இந்தோனேசியத் தற்காப்பு அமைச்சர் கூறியதாக சிட்னி மார்னிங் ஹெரல்ட் (Sydney Morning Herald) செய்தித் தாள் சொன்னது.
சீனாவுடனான உறவைப் பாதிக்கும் எண்ணங்கள் இல்லை என்றும் அவர் கூறியதை அந்த நாளிதழ் சுட்டியது.
Eelamurasu Australia Online News Portal