அவுஸ்திரேலியாவில் எரித்துக் கொல்லப்பட்ட இந்தியா வம்சாவளியை சேர்ந்த பேருந்து ஓட்டுநருக்காக பிரிஸ்பேன் நகர துணை மேயர் விம்மி விம்மி அழுது இரங்கலை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் சில தினங்களுக்கு முன் இந்தியா வம்சாவளியை சேர்ந்த 29 வயது Manmeet Alisher என்ற பேருந்து ஓட்டுநர் பயணிகளுக்கு முன்னிலையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், Manmeet Alisher இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் பிரிஸ்பேன் நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மானம் வாசித்துக் கொண்டிருந்தபோது அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் துணை மேயர் ஆட்ரியன் ஸ்கிரீன்னெர் விம்மி விம்மி அழுதுள்ளார்.
பிரிஸ்பேன் நிர்வாகம், மன்மீத் ஷர்மாவின் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்களை இழப்பீட்டு தொகையைாக அறிவித்துள்ளது.
மேலும், மன்மீத் ஷர்மாவின் பெயரில் ஒரு அறக்கட்டளை துவக்கி, அதன் மூலம் மன்மீத் ஷர்மாவின் குடும்பத்தினருக்கு நிதி திரட்டி தர முடிவு செய்துள்ளது.