அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்ரேலியா: சூறாவளி தாக்கிய பகுதிகளில் துப்புரவு பணிகள்

அவுஸ்ரேலியாவில் சூறாவளி தாக்கிய பகுதிகளில் பெரியளவிலான துப்புரவுப் பணிகள் நடந்துவருகின்றன.சூறாவளியில் குறைந்தது இரண்டு பேர் மாண்டனர்.மூன்று பேரைக் காணவில்லை. கடந்த வாரம் பெய்த கன மழையிலும் வீசியக் கடும் காற்றிலும் குவின்ஸ்லந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். சுமார் 770 மில்லியன் டாலர் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றுஅவுஸ்ரேலியக் காப்பீட்டு மன்றம் கணித்துள்ளது.

Read More »

அவுஸ்ரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் அடுத்த வாரம் இந்தியா பயணம்!

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பு ஏற்று அவுஸ்ரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் அரசு முறைப் பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பு ஏற்று அவுஸ்ரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் அரசு முறைப் பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு அவுஸ்ரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல்-ஐ சந்தித்தார். இந்தியா – அவுஸ்ரேலியா இடையிலான உறவுகளை பலப்படுத்தும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இன்னமும் உயர்ந்துகொண்டிருக்கும் வெள்ளநீர்

அவுஸ்ரேலியாவில் வெள்ளநீர் இன்னமும் உயர்ந்துகொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்ணீர், மின்சாரம் போன்ற சேவைகள் தடைபட்டிருக்கின்றன.அவற்றை மீண்டும் செயல்படுத்த அவசரநிலை ஊழியர்கள் பாடுபட்டுவருகின்றனர். டெபி சூறாவளியில் குறைந்தது மூவர் மாண்டனர். நியூ சவுத் வேல்ஸ், குவின்ஸ்லந்து மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் பெய்த கனமழையில் சிலரைக் காணவில்லை என்றும் புகார் கொடுக்கப்பட்டது. அவை பேரிடர் பகுதிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். மழை தணிந்தாலும், சில நகர்ப்பகுதிகளில் வெள்ளத்துக்கான எச்சரிக்கை நீக்கப்படவில்லை. சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகளால் சுமார் 770 மில்லியன் டாலர் பெரும்பாலான ...

Read More »

அவுஸ்ரேலியா சூறாவளியால் பெண்கள் பலி

அவுஸ்ரேலியாவில், டெபி சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் மாண்ட இரண்டாவது பெண்ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குவீன்ஸ்லந்து மாநில எல்லையில் உள்ள மர்விலம்பாவுக்கருகே காணாமற்போன 64 வயது மாதின் சடலம் அது. அவரது வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், வாகனத்திலிருந்த அவரது 74 வயது கணவர் உயிர் தப்பியதாகவும் கூறப்பட்டது. அவ்வட்டாரத்தில் வெள்ள நீர் 3 மீட்டர் இருந்ததாக மாநில அவசரகாலச் சேவை அமைப்பு தெரிவித்தது. டெபி சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தின் அளவு ஒரு பில்லியன் அவுஸ்ரேலிய டாலரை எட்டலாம் என்று அவுஸ்ரேலியக் காப்பீட்டுக் கழகம் மதிப்பிட்டுள்ளது.

Read More »

முதலாவது பூமி நேரம் நிகழ்ச்சி சிட்னியில் தொடங்கப்பட்ட நாள்: மார்ச். 31, 2007

வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்திவைக்கக் கோரும் ஒரு நிகழ்வாக உலகம் முழுவதும் பூமி நேரம் (Earth Hour) கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு அவுஸ்ரேலியாவின் இயற்கைக்கான நிதியத்தினால் தொடங்கப்பட்டது. முதலாவது எர்த் ஹவர் நிகழ்வு 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் திகதி சிட்னியில் நடைபெற்றது. 2008-ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர். ...

Read More »

வெள்ளத்தில் மிதக்கும் அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள் மூழ்கி கிடக்கின்றன. பசிபிக் கடலில் மையம் கொண்டு இருந்த புயல் ஒன்று அவுஸ்ரேலியாவில் உள்ள தென் கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதியை தாக்கியது. இந்த புயல் காரணமாக அந்த பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. புயல் தாக்குதலுக்கு பிறகு இதுவரை 40 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 20 செ.மீட்டர் மழை கொட்டி இருக்கிறது. இதனால் தெற்கு குயின்ஸ்லாந்து பகுதி முழுவதும் வெள்ளக்காடாக ...

Read More »

அவுஸ்ரேலியாவில் 270 மீட்டர் வேகத்தில் வீசிய புயல்

அவுஸ்ரேலியாவில் 270 கி.மீட்டர் வேகத்தில் டெப்பி புயல் வீசியதில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதனால் அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அவுஸ்ரேலியாவில் பசிபிக் கடலில் ‘டெப்பி’ என பெயரிடப்பட்ட கடும் புயல் உருவானது. அப்புயல் நேற்று முன்தினம் குவின்ஸ்லாந்தில் போவன்- ஏர்லி கடற்கரை இடையே கரையை கடந்தது. இதனால் மணிக்கு 273 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடுமையான சூறாவளி வீசியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. பெரும்பாலான ...

Read More »

அவுஸ்ரேலியாவில் மருத்துவரை சந்திக்கும் போது…..

உடல் நிலை சரியில்லை என்றால் ஒவ்வொருவரும் நாடுவது அவர்களின் குடும்ப வைத்தியரை. ஆஸ்திரேலியாவில் குடும்ப வைத்தியர் GP என்று அழைக்கப்படுவர். அவுஸ்ரேலிய  குடியுரிமை உடையவர்கள், நிரந்திர வதிவிட உரிமை கொண்டவர்கள் மற்றும் குறிப்பிட்ட விசா வைத்திருப்பவர்கள் அனைவரும் குடும்ப வைத்தியர் மற்றும் நிபுணர்களிடம் இலவசமாக அல்லது குறைந்த கட்டணம் செலுத்தி மருத்துவ ஆலோசனை பெறலாம். பல்வேறு விதமான உடல் நல, மனநல பிரச்சனைகளுக்காக நீங்கள் குடும்ப வைத்தியரை அணுகலாம். குடும்ப வைத்தியரிடம் கட்டணம் செலுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெற நீங்கள் Medicare அட்டை வைத்திருக்க ...

Read More »

அவுஸ்ரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதியை தாக்கிய ‘டெப்பி’ புயல்

அவுஸ்ரேலிய நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியை ‘டெப்பி’ என்ற புயல் நேற்று தாக்கியது. கடற்கரை பகுதியில் மணிக்கு 263 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி வீசியது. அவுஸ்ரேலிய நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியை ‘டெப்பி’ என்ற புயல் நேற்று தாக்கியது. குயின்ஸ்லாந்து பகுதியில் அமைந்துள்ள பவன், ஏர்லி கடற்கரை பகுதியில் மணிக்கு 263 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி வீசியது. 3-வது பிரிவு புயலாக வகைப்படுத்தப்பட்ட இந்த புயல் காரணமாக அங்கு இடைவிடாது, பேய் மழை பெய்தது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல ...

Read More »

அவுஸ்ரேலியாவிலிருந்து நியூசிலாந்துக்கு விமானத்தில் சென்ற பாம்பு!

அவுஸ்ரேலியாவில் பலவகையான பாம்புகள் காணப்படும் நிலையில், நமது அண்டைநாடான நியூசிலாந்து மக்கள் பாம்புகளின் தொல்லையின்றி வாழ்கிறார்கள். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேர்னிலிருந்து நியூசிலாந்துக்கு brown tree வகை பாம்பொன்று தனியார் சொகுசு விமானத்தில் பறந்து சென்றிருக்கிறது. பிரிஸ்பேர்னில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் சில்லு வழியாக உள்ளே சென்ற பாம்பு, Auckland விமானநிலையத்தைச் சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதை அவதானித்த ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து பாம்பை அப்புறப்படுத்தினர். இதேவேளை குறித்த பாம்பு பலவீனமான நிலையில் இருந்ததாகவும், விலங்குவாரியத்தின் அனுமதி கிடைத்த பின்னர் கொலை செய்யப்படவுள்ளதாகவும் ...

Read More »