அவுஸ்ரேலியாவில் 270 மீட்டர் வேகத்தில் வீசிய புயல்

அவுஸ்ரேலியாவில் 270 கி.மீட்டர் வேகத்தில் டெப்பி புயல் வீசியதில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதனால் அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அவுஸ்ரேலியாவில் பசிபிக் கடலில் ‘டெப்பி’ என பெயரிடப்பட்ட கடும் புயல் உருவானது. அப்புயல் நேற்று முன்தினம் குவின்ஸ்லாந்தில் போவன்- ஏர்லி கடற்கரை இடையே கரையை கடந்தது.

இதனால் மணிக்கு 273 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கடுமையான சூறாவளி வீசியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. பெரும்பாலான வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. இதனால் குவின்ஸ்லாந்தில் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்தன.

குவின்ஸ்லாந்தின் பிரசித்தி பெற்ற கிரேட் பாரியார் கப் தீவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது ஒரு சுற்றுலா தளமாகும். இங்கு தங்கியிருந்த வெளிநாட்டினர் கடும் அவதிக்குள்ளாகினர்.

பவுன்ஸ் வில்லே மாக்கே ஆகிய விமான, நிலையங்கள் மூடப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.