அவுஸ்ரேலியாவிலிருந்து நியூசிலாந்துக்கு விமானத்தில் சென்ற பாம்பு!

அவுஸ்ரேலியாவில் பலவகையான பாம்புகள் காணப்படும் நிலையில், நமது அண்டைநாடான நியூசிலாந்து மக்கள் பாம்புகளின் தொல்லையின்றி வாழ்கிறார்கள்.

ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேர்னிலிருந்து நியூசிலாந்துக்கு brown tree வகை பாம்பொன்று தனியார் சொகுசு விமானத்தில் பறந்து சென்றிருக்கிறது.

பிரிஸ்பேர்னில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் சில்லு வழியாக உள்ளே சென்ற பாம்பு, Auckland விமானநிலையத்தைச் சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதை அவதானித்த ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து பாம்பை அப்புறப்படுத்தினர்.

இதேவேளை குறித்த பாம்பு பலவீனமான நிலையில் இருந்ததாகவும், விலங்குவாரியத்தின் அனுமதி கிடைத்த பின்னர் கொலை செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.