சிறிலங்காவின் தெற்கில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக 89 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை அவுஸ்திரேலிய அரசாங்கம், உலக உணவு வேலைத்திட்டம் மற்றும் யுனிசெவ் அமைப்பு ஆகியன இணைந்து சிறிலங்காவிற்கு வழங்கியுள்ளன. இயற்கை அனர்த்தத்திற்கு தயாராவதற்கும், உடனடியாக செயல்படுவதற்குமாக அந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. குறித்த வேலைத்திட்டம் மூன்று வருட காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்கான உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
Read More »அவுஸ்திரேலியமுரசு
ஆஸ்திரேலியாவில் இருந்து நிபா வைரஸ் சிகிச்சைக்கான மருத்து!
கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் தொற்றுநோய் ஏற்பட்ட வவ்வால்கள் மூலம் பிற விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவுவதாக தெரிய வந்துள்ளது. தமிழக-கேரள எல்லையில் கோவை மாவட்டம் இருப்பதால், நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூச்சுவிட முடியாமை, குறைந்த இரத்த அழுத்தம், காய்ச்சல், தலைவலி, மயக்கம், குழப்பமான மனநிலை, கோமா போன்றவை வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறிகளாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் ...
Read More »போதைப்பொருள் கடத்த முயன்ற அவுஸ்திரேலியப் பெண்ணுக்கு மலேசியாவில் மரண தண்டனை!
மலேசியாவில் போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணுக்கு விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 54 வயதான மரியா எக்ஸ்போஸ்டோ என்னும் 3 பிள்ளைகளின் தாயான பெண்ணுக்கே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டு டிசம்பர் மாதம் ஷாங்காய் நகரில் இருந்து மெல்பேர்ன் நகருக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி செய்ததாக மலேசிய விமான நிலையத்திள் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இவரிடமிருந்து ஒரு கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட போதைப்பொருள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குற்றந்நாட்டினை மறுத்த ...
Read More »இலஞ்சம் வாங்கி அவுஸ்திரேலிய விசா கொடுத்த அதிகாரிகள்!
தென்னாபிரிக்காவிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலிய விசாவைப் பெற்றுக் கொள்வதற்காக நைஜீரிய நாட்டினர் இலஞ்சம் கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனை அடுத்து இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை 21 நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அவுஸ்திரேலிய மாணவர் விசாக்களை முறைகேடாகப் பெற்றுள்ளனர் என The Herald Sun செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற விசாரணையின் அடிப்படையில் தூதரக அதிகாரிகள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள அவுஸ்திரேலிய ...
Read More »50 பேரைத் தேடுகிறது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு காணாமற்போன 50 விளையாட்டாளர்களையும், அதிகாரிகளையும் தேடி வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். மேலும் 190 பேர் அடைக்கலம் நாடுவதாகவும் திரு. பீட்டர் டட்டன் கூறினார்.அவர்கள் பாதுகாப்பு விசாவிற்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும் 15 பேர் வேறுவிதமான விசாக்களுக்கு விண்ணப்பித்ததாக அவர் கூறினார். தலைநகர் கென்பேராவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் திரு. டட்டன் அதனைத் தெரிவித்தார். காணாமற்போன 50 பேரையும் கண்டுபிடித்து, அவர்களை ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றி, சொந்த நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் ...
Read More »சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்போருக்கு சிக்கல்!
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற பொதுநலவாய நாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக வந்தவர்களில் சுமார் 200 பேர் வெவ்வேறு விசாக்களுக்கு விண்ணப்பித்து அவுஸ்திரேலியாவிலேயே தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 50 பேர் விசா முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை பொதுநலவாய நாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக 8,103 பேர் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்துள்ளனர். இவர்களில் 7,848 பேர் மாத்திரமே நாட்டைவிட்டு வெளியேறியதாகவும் செனற் விசாரணைக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் வெவ்வேறு விசாக்களுக்கு 200 பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது bridging விசாவில் சட்டரீதியாக தங்கியிருப்பதாகவும் ...
Read More »செல்பி மோகத்தால் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் பலி!
ஆஸ்திரேலியாவின் வரலாற்று சிறப்புமிக்க கோட்டைப்பகுதியின் ஆபத்தான இடத்தில் செல்பி எடுக்க முயன்ற இந்திய மாணவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார். ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் படித்து வரும் இந்திய மாணவர் அங்கித் என்பவர் அவரது நண்பர்களுடன் அல்பானி அருகில் உள்ள புகழ்பெற்ற கோட்டைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு, தனது செல்பி மோகத்தால் கோட்டையின் அருகில் உள்ள ஆபத்தான மலைப் பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது கால் தவறி விழுந்த மாணவர், கடலில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ...
Read More »அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் 2000 அகதிகள்!
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் முயற்சியில் ஈடுபட்ட சுமார் 2000 அகதிகள் மனுஸ் மற்றும் நவுருவில் உள்ள தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் படகு வழியாக நுழைந்த இந்த அகதிகள், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இந்த தடுப்புக் காலம் எந்தவித வரையறைமின்றி வைக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனங்களும் தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் பற்றி வரும் ஜுலை மாதம் நடக்கவிருக்கும் தொழிலாளர் கட்சியின் தேசிய மாநாட்டில் ...
Read More »நாடுகடத்தப்படும் நிலையில் உள்ள குடும்பத்திற்கு ஆதரவாக 1 லட்சம் கையெழுத்துக்கள்!
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படும் நிலையில் நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் உள்ளனர். இந்நிலையில் குறித்த குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்த வேண்டாமெனக் கோரி ஏறக்குறைய 1 லட்சம் கையெழுத்துக்கள் உள்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை நடேசலிங்கம் – பிரியா தம்பதி மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 2 வயது மற்றும் 9 மாதக் குழந்தைகள் பல காலமாக Biloela-வில் வாழ்ந்து வந்தனர். அவர்களது Bridging visa கடந்த தை – மாசி மாதமளவில் காலாவதியாகியிருந்ததை அடுத்து, அவர்கள் நாடு கடத்தப்படும் நோக்கில் ...
Read More »அவுஸ்திரேலிய குடியுரிமை பெறுவதற்கான தேர்வில் நடந்த தவறு!
அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவதற்காக நடாத்தப்படும் தேர்வில் பிழை இருந்தமை இனங்காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. குடியுரிமைக்கான தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் ஒன்றினை தெரிவு செய்ய வேண்டும். இந்த நிலையில் அவ்வாறான ஒரு கேள்வியில் கொடுக்கப்பட்ட பதில்கள் அனைத்தும் தவறானவை என இந்த வாரம் தேர்வு எழுதிய பிரிட்டிஷ் பெண்மணி ஒருவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியானது, அவுஸ்திரேலியாவின் மொத்த சனத்தொகை எவ்வளவு என்பதுதான். இதற்குரிய பதில்களாக 18 மில்லியன், 22 மில்லியன் மற்றும் 30 மில்லியன் ஆகியன கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் அவுஸ்திரேலியாவின் ...
Read More »