ஆஸ்திரேலியாவின் வரலாற்று சிறப்புமிக்க கோட்டைப்பகுதியின் ஆபத்தான இடத்தில் செல்பி எடுக்க முயன்ற இந்திய மாணவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் படித்து வரும் இந்திய மாணவர் அங்கித் என்பவர் அவரது நண்பர்களுடன் அல்பானி அருகில் உள்ள புகழ்பெற்ற கோட்டைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு, தனது செல்பி மோகத்தால் கோட்டையின் அருகில் உள்ள ஆபத்தான மலைப் பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது கால் தவறி விழுந்த மாணவர், கடலில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஹெலிகாப்டர் உதவியுடன் மாணவனின் உடலை மீட்டதாகவும், சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்க இந்தியாவில் உள்ள மாணவரின் பெற்றோரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2 வருடங்களாக இந்த பகுதி மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.