சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்போருக்கு சிக்கல்!

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற பொதுநலவாய நாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக வந்தவர்களில் சுமார் 200 பேர் வெவ்வேறு விசாக்களுக்கு விண்ணப்பித்து அவுஸ்திரேலியாவிலேயே தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 50 பேர் விசா முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பொதுநலவாய நாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக 8,103 பேர் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்துள்ளனர்.

இவர்களில் 7,848 பேர் மாத்திரமே நாட்டைவிட்டு வெளியேறியதாகவும் செனற் விசாரணைக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் வெவ்வேறு விசாக்களுக்கு 200 பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது bridging விசாவில் சட்டரீதியாக தங்கியிருப்பதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பு விசாவுக்கே விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.