ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு காணாமற்போன 50 விளையாட்டாளர்களையும், அதிகாரிகளையும் தேடி வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
மேலும் 190 பேர் அடைக்கலம் நாடுவதாகவும் திரு. பீட்டர் டட்டன் கூறினார்.அவர்கள் பாதுகாப்பு விசாவிற்கு விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் 15 பேர் வேறுவிதமான விசாக்களுக்கு விண்ணப்பித்ததாக அவர் கூறினார். தலைநகர் கென்பேராவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் திரு. டட்டன் அதனைத் தெரிவித்தார்.
காணாமற்போன 50 பேரையும் கண்டுபிடித்து, அவர்களை ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றி, சொந்த நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.