அவுஸ்திரேலியமுரசு

இங்கிலாந்து – அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி!

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. மென்செஸ்டர் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கனும், அவுஸ்ரேலிய அணிக்கு டிம் பெய்னும் தலைமை தாங்கவுள்ளனர். ஏற்கனவே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி, வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஆகையால் இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று அவுஸ்ரேலிய அணியை வயிட் வோஷ் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து உள்ளது. இதேவேளை, அவுஸ்ரேலிய அணி, ஒருபோட்டியிலாவது வெற்றிபெற வேண்டுமென்ற ஆறுதல் வெற்றியை நோக்கி இன்று களமிறங்கும். எதுஎவ்வாறாயினும் இப்போட்டி ...

Read More »

புகலிடம் கோருவோரை ஏற்க முடியாது! – அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் அதிகளவிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் தஞ்சம் பெறும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலியாவின் லிபரல் கட்சி உறுப்பினர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார். தி ஒஸ்ட்ரேலியன் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த 5 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களை தடுக்க முடியாமல் இருக்கும் நிலையினை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே இதனை தடுப்பதற்குரிய நடவடிக்கையினை அவுஸ்திரேலியா எடுக்கத் தவறுமாயின் எதிர்காலத்தில் பாரிய பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கையினையும் விடுத்துள்ளார்.

Read More »

கணவனுக்கு சயனைடு கொடுத்து கொலைசெய்த மனைவி!

தவறான தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு சயனைடு கலந்த ஜூஸ் கொடுத்து தற்கொலை என்று நாடகமாடிய இந்தியப் பெண்ணுக்கும், முன்னாள் காதலருக்கும் 20 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறை தண்டனை விதித்து ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது இந்தியப் பெண் தனது காதலருக்கு எழுதிய டைரிதான் இருவரும் சிக்குவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இதனால், இந்தியப் பெண்ணுக்கு 22 ஆண்டுகளும், காதலனுக்கு 27 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த சோபியா ஷாம் (வயது34). இவரின் முன்னாள் காதலர் அருண் கமலாசன் ...

Read More »

ஆஸி. நிர்ணயித்த 311 ரன்கள் இலக்கு நிர்மூலம்!

செஸ்ட்ர் லீ ஸ்ட்ரீட்டில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை ஊதித்தள்ளியது இங்கிலாந்து, இதன் மூலம் 4-0 என்று ஒயிட்வாஷுக்குத் தயாரானது இங்கிலாந்து. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஏரோன் பிஞ்ச், ஷான் மார்ஷ் சதங்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்தது, இலக்கை விரட்டிய இங்கிலாந்து ஜேசன் ராயின் 83 பந்து சதத்தினாலும் பேர்ஸ்டோ, பட்லர் அதிரடியில் 45வது ஓவரில் 314/4 என்று வெற்றி பெற்று தொடரில் 4-0 என்று முன்னிலை பெற்றது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து கடைசி ...

Read More »

அவுஸ்திரேலிய தமிழ்க் குடும்பத்தின் நாடுகடத்தல் உறுதி!

அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தலை எதிர்நோக்கியிருந்த நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தின் நாடுகடத்தலைத் தடைசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தஞ்சம் கோரி அவுஸ்திரேலியா வந்த நடேசலிங்கம்-பிரியா தம்பதி மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 2 வயது மற்றும் பத்துமாத குழந்தைகள் பல காலமாக குயின்ஸ்லாந்தின் Biloela-வில் வாழ்ந்து வந்தனர். இவர்களுடைய bridging visa கடந்த தை – மாசி மாதமளவில் காலாவதியாகியிருந்தது. இதனை அடுத்து நாடு கடத்தப்படும் நோக்கில் கடந்த 100 நாட்களுக்கும் ...

Read More »

அணியில் அதிரடி மாற்றத்தை உருவாக்க விரும்பவில்லை!

இங்கிலாந்திற்கு எதிரான படுதோல்வியால் அணியில் அதிரடி மாற்றத்தை உருவாக்க விரும்பவில்லை என்று ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார். இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 50 ஓவரில் 481 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்தது. பின்னர், பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 239 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘இங்கிலாந்தின் இந்த ஆட்டம் தற்செயலாக நடந்தது அல்ல. ...

Read More »

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 242 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இங்கிலாந்து அணி முதலில் இருந்தே ஆஸ்திரேலியா பந்து வீச்சை பதம் பார்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும்  அடித்து ...

Read More »

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதன் முறையாக சர்வதேச யோகா தினம்!

ஆஸ்திரேலிய நாட்டின் பாராளுமன்றத்தில் முதன் முறையாக கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினத்தில் முன்னாள் பிரதமர் டோனி அப்போட் பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டார். ஜுன் 21-ம் திகதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆஸ்திரேலிய நாட்டின் வாசுதேவ் கிரியா யோகா என்ற அமைப்பின் சார்பில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி அப்பேட் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினார். இதுதொடர்பாக பேசிய அவர், ...

Read More »

6-ம் இடம் என்பது ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை பாதாளம்!

உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி ஐசிசி சர்வதேச ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6-வது இடத்துக்குச் சரிந்து, பாகிஸ்தானுக்கும் கீழாகச் சென்றுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி முதல் இரு போட்டிகளிலும் மோசமான தோல்வியை அடைந்த காரணத்தால், தரவரிசைப்பட்டியலில் பாதாளத்துக்குச் சென்றது. 6-ம் இடம் என்பது ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை பாதாளம் என்றேதான் கூற முடியும். இதற்கு முன் கடைசியாக தரவரிசைப்பட்டியலில் 6-ம் இடத்தில் கடந்த 1984ம் ஆண்டு ஆஸ்திரேலியா இருந்தது அதற்குப்பின் இப்போது சரிந்துள்ளது. இங்கிலாந்து ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பறக்கும் டாக்சி சேவை!

அவுஸ்திரேலியாவில் வான்வழி பறக்கும் டாக்சி சேவையை அறிமுகம் செய்ய Uber நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சிட்னியிலிருந்து மெல்போர்னுக்கு அல்லது மெல்போர்னிலிருந்து சிட்னிக்கும் அதி விரைவில் செல்லும் வகையில் வான்வழி பறக்கும் டாக்சி சேவை அறிமுகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னும் 2 ஆண்டுகளில், இந்த சேவையை அவுஸ்திரேலியாவில் அறிமுகம் செய்து 5 ஆண்டுகளில் அதாவது எதிர்வரும் 2023 ஆண்டுக்குள் இந்த சேவையை உலகம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. Uber நிறுவனம் அறிமுகம் செய்யும் இந்த பறக்கும் டாக்சி UberAir என்று அழைக்கப்படும் என ...

Read More »