இங்கிலாந்து – அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி!

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

மென்செஸ்டர் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கனும், அவுஸ்ரேலிய அணிக்கு டிம் பெய்னும் தலைமை தாங்கவுள்ளனர்.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி, வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஆகையால் இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று அவுஸ்ரேலிய அணியை வயிட் வோஷ் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து உள்ளது.

இதேவேளை, அவுஸ்ரேலிய அணி, ஒருபோட்டியிலாவது வெற்றிபெற வேண்டுமென்ற ஆறுதல் வெற்றியை நோக்கி இன்று களமிறங்கும். எதுஎவ்வாறாயினும் இப்போட்டி இரசிகர்களை மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.