அவுஸ்திரேலியாவில் வான்வழி பறக்கும் டாக்சி சேவையை அறிமுகம் செய்ய Uber நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சிட்னியிலிருந்து மெல்போர்னுக்கு அல்லது மெல்போர்னிலிருந்து சிட்னிக்கும் அதி விரைவில் செல்லும் வகையில் வான்வழி பறக்கும் டாக்சி சேவை அறிமுகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்னும் 2 ஆண்டுகளில், இந்த சேவையை அவுஸ்திரேலியாவில் அறிமுகம் செய்து 5 ஆண்டுகளில் அதாவது எதிர்வரும் 2023 ஆண்டுக்குள் இந்த சேவையை உலகம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Uber நிறுவனம் அறிமுகம் செய்யும் இந்த பறக்கும் டாக்சி UberAir என்று அழைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கட்டணம் UberX ride போன்று சராசரியாகவே இருக்கும் என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வருமாயின் உலகிலே முதன்முதலாக பறக்கும் டாக்சி சேவை அவுஸ்திரேலியாவில் தான் அறிமுகம் செய்கிறது என்ற பெருமையைப் பெறுகிறது.
இது தொடர்பாக அவுஸ்திரேலிய போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக Uber நிறுவனம் தெரிவித்துள்ளது.