அவுஸ்திரேலியமுரசு

உலகின் தலைசிறந்த ஆசிரியராக அவுஸ்ரேலிய தமிழ் பெண்!

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழச்சியான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகி உலகத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக 179 நாடுகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளின்படி ஒரு மில்லியன் அமெரிக்க டொடலர் பரிசுத் தொகையானது யசோதைக்கு கிடைத்துள்ளது. மேலும் அவரது மாணவர்களுக்கு ‘MS Selva’ என இவர் நன்கு அறியப்படுவதாக சர்வதேச ஊடகமொன்றில் கூறப்பட்டுள்ளது.

Read More »

அகதிகளின் மருத்துவ உதவிகள் தொடர்பாக புதிய அறிவிப்பு !

அகதிகளின் மருத்துவ உதவிகள் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Peter Dutton வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் நவுறு மற்றும் மனுஸ் தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் தங்கள் மருத்துவ உதவிகளை மேற்கொள்ள அவுஸ்திரேலியாவின் சில நகரங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவ உதவிகள் தொடர்பாக இனிமேல் கிறிஸ்துமஸ் தீவுக்கு அவர்கள் செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 1 பில்லியன் டொலர் செலவில் கிறிஸ்துவ முகாமில் வசதிகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவ உதவிகளையும் தாண்டி மேற்கொண்டு வசதிகள் ஏதும் தேவைப்பட்டால் ...

Read More »

எச்சரிக்கை விடுத்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் !

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஆபத்தான படகு பயணத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள் ஒரு போதும் வெற்றிபெற முடியாது எனக் கூறியுள்ளார். ஆட்கடத்தல்காரர்களை குறிவைத்து 15 நாட்டு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இவ்வீடியோ ரகசியமாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. தஞ்சக்கோரிக்கையாளர்கள் அதிகமாக வெளியேறும் நாடுகளாக உள்ள இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இடைப்பட்ட நாடுகளாக உள்ள இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை குறிவைத்து இக் காணொளி பரப்பப்படுகின்றது. அந்த எச்சரிக்கை ...

Read More »

அவுஸ்திரேலியா சென்ற பிரித்தானியரும் பிரான்ஸ் நாட்டவரும் மாயம்!

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு பிரித்தானியரும் ஒரு பிரான்ஸ் நாட்டவரும் மாயமாகியுள்ளதையடுத்து அவுஸ்திரேலிய காவல் துறையினர்  தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். Hugo Palmer மற்றும் Erwan Ferrieux என்னும் இருபது வயதுள்ள சுற்றுலாப்பயணிகள் இருவரும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். சிட்னிக்கு வடக்கேயுள்ள கடற்கரை ஒன்றில் சில பொருட்கள் அநாதையாக கிடந்ததைக் கண்ட சிலர் காவல் துறைக்கு தகவல் அளிக்க, அங்கு வந்த காவல் துறை அவை Hugo Palmer மற்றும் Erwan Ferrieuxக்கு சொந்தமானவை என்பதை அறிந்தனர். சுற்றிலும் தேடியதில் அங்கு இருவரும் வாடகைக்கு ...

Read More »

சான்ஸ் ஃபார்காட்டிகா: நினைவாற்றலைப் பெருக்கும் எழுத்துரு முயற்சி!

வாசகர்கள் படித்ததை மனதில் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளவும், மாணவர்கள் நினைவாற்றலை தக்கவைத்துக்கொள்ளவும் வாய்ப்பாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் வடிவமைப்புப் பிரிவின் ஆய்வாளர்கள் சான்ஸ் ஃபார்காட்டிகா (Sans Forgetica) என்ற ஒரு புதிய ஆங்கில எழுத்துருவினை உருவாக்கியுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் 400 பேரை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின்படி, சாதாரண ‘ஏரியல்’ எழுத்துருவில் 50%  நினைவுவைத்துக்கொள்ள முடியும் என்றால்,  புதிய எழுத்துருவான ‘சான்ஸ் ஃபார்காட்டிகாகா’வில் 57% நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது. இந்த எழுத்துருவினை உருவாக்க ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. பரிசோதனையின்போது மூன்று ...

Read More »

அவுஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்குதல்!

அவுஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கியதில் 41 வயதான நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான நபர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. Belongil கடற்கரையில் அலையாடலில் ஈடுபட்டிருந்த போது அவருடைய பலகையைச் சுறா தாக்கியது. உடனிருந்த மற்றொரு நண்பரின் உதவியோடு அவர் சுறாவிடமிருந்து தப்பித்தார். எந்த மாதிரியான சுறா தாக்கியது என்பதை பொலிஸார் ஆராய்ந்து வருகிறது. அந்த சம்பவத்திற்கு பிறகு, இரண்டு கடற்கரைகளும் 24 மணி நேரத்திற்கு மூடப்பட்டன.

Read More »

அவுஸ்திரேலிய குடியுரிமை பரீட்சையில் 4807 பேர் தோல்வி!

அவுஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்கான பரீட்சையில் கடந்த வருடம் நான்காயிரத்து 807 பேர் அனைத்து வினாக்களுக்கும் தவறாக பதிலளித்து தோல்வியடைந்துள்ளனர். உள்துறை அமைச்சினால் இந்த பரீட்சை நடத்தப்பட்டுவருகின்றது. குடியுரிமை பெற்றுக்கொண்டவர்களில் ஆயிரத்து 200 பேர் மூன்று தடவைகளுக்கு மேல் இந்த பரீட்சையில் தோல்வியடைந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவுத்திணைக்களம் மற்றும் உள்துறை அமைச்சின் செயற்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்பட்டுவரும் பரீட்சை எவ்வளவு சிக்கலானது என்பது இந்த முடிவுகளின் மூலம் தெளிவாகிறது. மேற்படி தரவுகளை மேற்கோள்காண்பித்து ஊடகங்கள் ...

Read More »

அவுஸ்திரேலிய குடியுரிமையுடைய மாப்பிள்ளைகள் வாங்கிய சீதனம்!

குடும்ப வன்முறையின் ஒரு பகுதியாக சட்டத்தில் சீதனம் வாங்கும் முறையினை உள்ளடக்கவேண்டும் என செனட் குழு அவுஸ்திரேலிய அரசிடம் பரிந்துரைத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் சீதனம் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் மக்களிடம் முறைப்பாடுகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் செனட் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அவுஸ்திரேலியாவில் தற்போது நடைமுறையிலுள்ள குடிவரவாளர்களுக்கான திட்டங்களின் கீழ் தற்காலிக விசாவிலுள்ள பெண்களுக்கான பாதுகாப்பு மிகக்குறைவாக உள்ளது. ஆகவே பெண்களுக்கு எதிரான வரதட்சனைக் கொடுமை பெரும் எண்ணிக்கையில் நடைபெறுகிறது என்று குறித்த அமைப்பு சுட்டியுள்ளது. தற்கொலைகள் மற்றும் கொலைகளுக்கு சீதனக்கொடுமை பிரதான காரணமாக ...

Read More »

மனுஸ் தீவில் வாழும் அகதிக்கு வழங்கப்பட்ட மிக முக்கிய விருது!

மனுஸ் தீவில் வாழும் அகதி ஒருவருக்கு மனித உரிமைக்கான முக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது. சூடான் பின்னணி கொண்ட அகதி Abdul Aziz Muhamatக்கு மனித உரிமைக்கான முக்கிய விருதான ‘2019 Martin Ennals Award Laureate’ விருது வழங்கப்பட்டுள்ளது. கடல்கடந்த தடுப்பு முகாமிலுள்ளவர்களுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முதல் மனுஸ் தீவில் வாழ்ந்துவரும் Abdul Aziz Muhamat அங்கிருந்தபடியே சர்வதேச ஊடகங்களில் பேசிவந்தார். அதேநேரம் சமூக வலைத்தளங்களினூடாகவும் கடல்கடந்து வாழும் அகதிகள் எதிர்நோக்கும் இன்னல்கள் தொடர்பில் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மூக்குத்தி அணிந்ததால் மாணவிக்கு அனுமதி மறுப்பு!

பாடசாலை ஒன்றில் மூக்குத்தி அணிந்துசென்ற இந்திய பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இடம்பெற்றுள்ளது. அணிகலன்கள் பள்ளியின் சீருடைகளுக்கு முரணானது என பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார். மூக்குத்தி அணியாமல் வந்தால் மட்டுமே குறித்த மாணவிக்கு பள்ளிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். மேலும், பள்ளியில் சேர்க்கப்படும்போது சீருடை குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு அதில் கையெழுத்து வாங்கிய பின்னரே பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள், எனவே மாணவர்கள் அதனை பின்பற்றவேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்துள்ள பேட்டியில், இந்த நிலையில் என் ...

Read More »