அவுஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கியதில் 41 வயதான நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான நபர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. Belongil கடற்கரையில் அலையாடலில் ஈடுபட்டிருந்த போது அவருடைய பலகையைச் சுறா தாக்கியது.
உடனிருந்த மற்றொரு நண்பரின் உதவியோடு அவர் சுறாவிடமிருந்து தப்பித்தார். எந்த மாதிரியான சுறா தாக்கியது என்பதை பொலிஸார் ஆராய்ந்து வருகிறது. அந்த சம்பவத்திற்கு பிறகு, இரண்டு கடற்கரைகளும் 24 மணி நேரத்திற்கு மூடப்பட்டன.
Eelamurasu Australia Online News Portal