பாடசாலை ஒன்றில் மூக்குத்தி அணிந்துசென்ற இந்திய பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இடம்பெற்றுள்ளது.
அணிகலன்கள் பள்ளியின் சீருடைகளுக்கு முரணானது என பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்.
மூக்குத்தி அணியாமல் வந்தால் மட்டுமே குறித்த மாணவிக்கு பள்ளிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
மேலும், பள்ளியில் சேர்க்கப்படும்போது சீருடை குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு அதில் கையெழுத்து வாங்கிய பின்னரே பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள், எனவே மாணவர்கள் அதனை பின்பற்றவேண்டும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்துள்ள பேட்டியில்,
இந்த நிலையில் என் மகள் மூக்குத்தி அணிந்தது ஆடம்பரத்திற்காக அல்ல என்றும் அது கலாசாரத்தின் அடையாளம் என்றும் குறித்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார்.
பள்ளியில் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிய அனுமதி வழங்கப்படுவது போன்று எனது மகளுக்கும் இந்த அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal