அகதிகளின் மருத்துவ உதவிகள் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Peter Dutton வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் நவுறு மற்றும் மனுஸ் தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் தங்கள் மருத்துவ உதவிகளை மேற்கொள்ள அவுஸ்திரேலியாவின் சில நகரங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவ உதவிகள் தொடர்பாக இனிமேல் கிறிஸ்துமஸ் தீவுக்கு அவர்கள் செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக 1 பில்லியன் டொலர் செலவில் கிறிஸ்துவ முகாமில் வசதிகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருத்துவ உதவிகளையும் தாண்டி மேற்கொண்டு வசதிகள் ஏதும் தேவைப்பட்டால் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றதில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு கிரீன்ஸ்கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அகதிகளுக்கு மருத்துவ உதவி என்ற திட்டத்தில் எவ்வித வசதிகளும் இல்லாத கிறிஸ்மஸ் தீவுக்கு அகதிகளை அரசாங்கம் அனுப்புகிறது என தெரிவித்துள்ளது.