அவுஸ்திரேலியமுரசு

மனோத் மார்க்ஸ் Instagram கணக்கில் இறுதியாக பதிவிட்டவை!

300 பயணிகளுடன் பயணித்த மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு புரளியை கிளப்பிய இலங்கையர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த இலங்கையர் விமானத்தில் ஏறுவதற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்னர் சிகார் மற்றும் கெங்ஸ்டர் ரெப் இசையை ரசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். புதன்கிழமை இரவு 11.11 மணியளவில் MH128 என்ற விமானம் விமான நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த சற்று நேரத்தில் மனோத் மார்க்ஸ் என்ற இலங்கையர் தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இந்த நிலையில் விமானத்தை குண்டு வைத்து தகர்ப்பதாக ...

Read More »

3 குழந்தைகளை ஏரியில் மூழ்கடித்து கொன்ற தாயார்!

அவுஸ்ரேலியா நாட்டில் 3 குழந்தைகளை ஏரியில் காருடன் மூழ்கடித்து கொலை செய்த தாயாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தென்சூடான் நாட்டை சேர்ந்த Akon Guode(37) என்ற பெண் அவுஸ்ரேலியாவில் குடியேறி மெல்போர்ன் நகரில் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு வயது, 4 வயதில் இரண்டு குழந்தைகள் மற்றும் 6 வயது என 4 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு 4 குழந்தைகளையும் காரில் ஏற்றிக்கொண்டு தாயார் அவரே ஓட்டிச்சென்றுள்ளார். ஏரி ஒன்றிற்கு சென்ற அவர் காரை தண்ணீரில் ...

Read More »

மென்பேர்னில் இருந்து புறப்பட்ட விமானத்தில் குண்டுப் புரளி தீவிரவாத செயல் அல்ல!

மென்பேர்னில் இருந்து புறப்பட்ட மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் இலங்கையர் ஒருவர் ஏற்படுத்திய குண்டுப் புரளி, தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையது அல்ல என்று அவுஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு 11.11 மணியளவில் மலேசியன் எயர்லைன்ஸ் விமானம் மெல்பேர்ன் விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் நோக்கிப் புறப்பட்ட சற்று நேரத்தில், அதில் பயணம் செய்த இலங்கையர் ஒருவர் தன்னிடம் குண்டு இருப்பதாகவும், விமானத்தை வெடிக்க வைக்கப் போவதாகவும் சத்தமிட்டார். அத்துடன் அவர் விமானியின் அறைக்குள்ளேயும நுழைய முயன்றார். இதையடுத்து, புறப்பட்ட ஒரு மணிநேரத்திலே அந்த விமானம், ...

Read More »

மலேசிய விமானம் மெல்பேர்னில் அவசரமாக தரையிறக்கம்!

மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர் குண்டுப் புரளி கிளப்பியதுடன் விமானியின் அறைக்குள் நுழைய முயன்றதால் விமானம் அவசரமாக மெல்பேர்ன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. மெல்பேர்னில் இருந்து கோலாலம்பூர் சென்று கொண்டிருந்த மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த இலங்கையர் ஒருவர் தன்னிடம், குண்டு இருப்பதாக கூறி, விமானியின் அறைக்குள் நுழைய முயன்றார். இதனால், விமானி மெல்பேர்ன் விமான நிலையத்துக்கே திருப்பினார். நேற்றிரவு 11.40 மணியளவில் இந்த விமானம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மெல்பேர்ன் விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து. குண்டுப் ...

Read More »

ஆப்கானுக்கு 30 மேலதிக துருப்புக்களை அனுப்பவுள்ள அவுஸ்ரேலியா!

அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க, மேலதிகமாக 30 துருப்புக்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. குறித்த துருப்புக்கள் அனுப்பிவைக்கப்பட்டால், ஆப்கானிஸ்தானில் உள்ள மொத்த அவுஸ்ரேலிய துருப்புக்களின் எண்ணிக்கை 300ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மரைஸ் பெய்ன் (Marise Payne) உறுதி செய்துள்ளார். தலிபான் தீவிரவாதிகளுடன் தாக்குதல் நடத்துவதற்காக, குறைந்த பட்சம் 3,000 துருப்புக்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என இம்மாத ஆரம்பத்தில் அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையிலேயே துருப்புக்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப அவுஸ்ரேலியா தீர்மானித்துள்ளது. குறித்த துருப்புக்கள் ...

Read More »

சீரற்றகாலநிலை ; மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அவுஸ்ரேலியா நிதி உதவி!

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, நிவாரணங்களை பெற்று தருவதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு, 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை சிறீலங்காவுக்கு, அவுஸ்திரேலியா உதவித்தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. சிறீலங்கா அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை 188 பேர் உயிரிழந்துள்ளதுடன், 99பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு மொத்தமாக 15 மாவட்டங்களில் 149 ஆயிரத்து 678 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 75 ஆயிரத்து 885 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறீலங்காவின் நிவாரண பணிகளுக்காக, ...

Read More »

மழையினால் அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் போட்டி 10.2 ஓவருடன் கைவிடப்பட்டது

சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில் மழையினால் அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி 10.2 ஓவருடன் கைவிடப்பட்டது. இங்கிலாந்து, வேல்ஸில் வருகிற வியாழக்கிழமை (ஜூன் 1-ந்திகதி) சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னோட்டமாக பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. மழைக் காரணமாக ஆட்டம் காலதாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற அவுஸ்ரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி வார்னர், ஆரோன் பிஞ்ச் ...

Read More »

அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய அமைப்பு!

அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்குமிடையில், வருடாந்த ஒப்பந்தம் தொடர்பான முரண்பாடு அதிகரித்துள்ள நிலையில், வீரர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை முகாமை செய்வதற்காக, புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. உருவாக்கப்பட்டுள்ள அமைப்பே, வீரர்களின் வர்த்தக ஒப்பந்தங்கள், அனுசரணையாளர்களை முகாமை செய்தல், ஊடகங்களுக்கும் ஒளிபரப்பாளர்களுக்கும் அணுக்கத்தை வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளவுள்ளது. இதன்மூலம், அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்கள் அமைப்புக்கான நிதியளிப்பும் பெறப்படவுள்ளது. தற்போதுள்ள நடைமுறையின்படி, விரர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை, அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை பயன்படுத்துவதோடு, அதற்காக வருடாந்தம், கிரிக்கெட் வீரர்களின் சங்கத்துக்கு நிதியளித்து வருகிறது. ஆனால், அச்சங்கத்துக்கு நிதியளிப்பதை ...

Read More »

சிறீலங்கா அனர்த்தம் தொடர்பில் அவுஸ்ரேலியா இரங்கல்!

சிறீலங்காவில்  ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில்  அவுஸ்ரேலியா இரங்கல் வெளியிட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு கொள்வதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஸொப், இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வாவிற்கு இரங்கல் செய்தியை அனுப்பி வைத்துள்ளார். சிறீலங்காவுக்கு தேவை ஏற்பட்டால் உதவிகளை வழங்க ஆயத்தமாக இருப்பதாக அவர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Read More »