சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, நிவாரணங்களை பெற்று தருவதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு, 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை சிறீலங்காவுக்கு, அவுஸ்திரேலியா உதவித்தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
சிறீலங்கா அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை 188 பேர் உயிரிழந்துள்ளதுடன், 99பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு மொத்தமாக 15 மாவட்டங்களில் 149 ஆயிரத்து 678 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 75 ஆயிரத்து 885 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறீலங்காவின் நிவாரண பணிகளுக்காக, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தினுடாக 5 இலட்சம் டொலர்களை கொடுப்பதாகவும், மேலும் இலங்கையின் அனர்த்த செயற்பாடுகள் குறித்து அந்நாட்டு தொடர் அவதானத்துடன் இருப்பதோடு, எதிர்கால தேவைகளை கருத்திற்கொண்டு சிறீலங்காவுக்கான உதவிகளை மேற்கொள்ளுவதற்கு தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் இந்தியாவின் 3 நிவாரண கப்பல்கள் இலங்கை வந்துள்ள நிலையில், இன்று மலை பாகிஸ்தானின் நிவாரண கப்பல் ஒன்றும், எதிர்வரும் வியாழக்கிழமை 3 சீனக்கப்பல்களும் நிவாரண பணிகளுக்காக சிறீலங்கா வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Eelamurasu Australia Online News Portal