அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க, மேலதிகமாக 30 துருப்புக்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.
குறித்த துருப்புக்கள் அனுப்பிவைக்கப்பட்டால், ஆப்கானிஸ்தானில் உள்ள மொத்த அவுஸ்ரேலிய துருப்புக்களின் எண்ணிக்கை 300ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மரைஸ் பெய்ன் (Marise Payne) உறுதி செய்துள்ளார்.
தலிபான் தீவிரவாதிகளுடன் தாக்குதல் நடத்துவதற்காக, குறைந்த பட்சம் 3,000 துருப்புக்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என இம்மாத ஆரம்பத்தில் அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையிலேயே துருப்புக்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப அவுஸ்ரேலியா தீர்மானித்துள்ளது. குறித்த துருப்புக்கள் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு பயிற்சியளிப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal