சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில் மழையினால் அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி 10.2 ஓவருடன் கைவிடப்பட்டது.
இங்கிலாந்து, வேல்ஸில் வருகிற வியாழக்கிழமை (ஜூன் 1-ந்திகதி) சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்னோட்டமாக பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. மழைக் காரணமாக ஆட்டம் காலதாமதமாக தொடங்கியது.
டாஸ் வென்ற அவுஸ்ரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். அடுத்து ஸ்மித் களம் இறங்கினார்.
அவுஸ்ரேலியா 10.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை குறுக்கீட்டது, இதனால் 10.2 ஓவருடன் போட்டி கைவிடப்பட்டது. பிஞ்ச் 36 ரன்னுடனும், ஸ்மித் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மொகமது ஆமிர் 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.