ஆஸ்திரேலிய வாழ்க்கையை அந்நாட்டு விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக, ஆஸ்திரேலியவிழுமியங்கள் மற்றும் அடிப்படை கோட்பாடுகள் குறித்த புதிய அறிவிப்பை ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட குடிவரவுத் தொடர்பான இந்த அறிவிப்பில், ஆஸ்திரேலிய விழுமியங்களையும அடிப்படைகோட்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு அனைத்துவிதமான விசா விண்ணப்பத்தாரர்களும் கையெழுத்திட வேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த விழுமயங்களில் சுதந்திரம், மரியாதை, சமத்துவம், சட்டத்திற்கு கட்டுப்படுதல் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. ஆஸ்திரேலிய அரசு குறிப்பிடும் விழுமியங்கள்: * தனி மனித சுதந்திரம் * மத சுதந்திரம் (எந்த மதத்தையும் பின்பற்றாமல் ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
நாட்டிற்குள் திரும்பும் குடிமக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா இவ்வாண்டு இறுதிக்குள் தாயகம் திரும்ப மேலும் அதிகமானோருக்கு அனுமதி வழங்கவிருக்கிறது. COVID-19 நோய்த்தொற்று காரணமாகக் கடந்த ஜுலை மாதம் முதல் ஆஸ்திரேலியா அதன் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் நாட்டிற்குள் வருவதைக் கட்டுப்படுத்தியது. வாரத்திற்கு 6,315 பேர் மட்டும் தான் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது மேலும் 450 பேர் தாயகம் திரும்பலாம். புதிதாக நோய்ப்பரவல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக வெளிநாட்டிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பும் குடிமக்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்துள்ளதாகப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார். இருப்பினும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் தவிப்பதால் அந்த எண்ணிக்கை சற்றே உயர்த்தப்படுகிறது ...
Read More »அவுஸ்திரேலியாவில் மீண்டும் காடுகளில் விடப்படும் கோலா கரடிகள்!
அவுஸ்திரேலியாவில், காட்டுத் தீயினால் படுகாயமடைந்த கோலா கரடிகள், சிகிச்சைக்குப் பின்னர், மீண்டும் காடுகளில் விடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கங்காரு தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 5,20,000 ஏக்கர் காடுகள் எரிந்து சாம்பலான நிலையில், கடுமையான தீ காயங்களுடன் 100 க்கும் மேற்பட்ட கோலா கரடிகள் மீட்கப்பட்டன. காயங்களுக்கு மருந்திட்டு, சத்தான உணவு வகைகளை வழங்கி கரடிகளை பராமரிக்கும் விலங்கு நல ஆர்வலர்கள், காயங்கள் குணமடைந்ததும், மீண்டும் அவைகளை வனப்பகுதிகளில் விட்டு வருகின்றனர். கங்காரூ தீவில், கடந்த ஆண்டு 50,000 கோலா கரடிகள் இருந்த நிலையில், ...
Read More »ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் காணாமல் போன அகதி
கடந்த வாரத்தில், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் குடிவரவு இடைத்தங்கல் தடுப்பு முகாமிலிருந்து காணாமல் போன ஈரானிய அகதி பர்ஹத் ரஹ்மதி எங்கே என ஆஸ்திரேலிய எல்லைப்படையிடம் அகதிகள் நல வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உடற்பயிற்சி கூடத்திலிருந்து காவலாளிகளால் ஈரானிய அகதி வெளியேற்றப்பட்டது முதல் அவரைக் காணவில்லை எனச் சொல்லப்படுகின்றது. ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவச் சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அகதிகளின் நிலை குறித்து அவர் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்த ஒரு நபராக ஈரானிய அகதி பர்ஹத் ரஹ்மதி இருந்திருக்கிறார். ஆஸ்திரேலியாவின் கடல் ...
Read More »ஆஸ்திரேலியா: 5 மாதங்களில் முதன்முறையாக, உள்ளூர் அளவில் புதிதாகக் கிருமித்தொற்று இல்லை
ஆஸ்திரேலியாவில், கடந்த 5 மாதங்களில் முதன்முறையாக, உள்ளூர் அளவில் யாருக்கும் கிருமித்தொற்று உறுதிசெய்யப்படவில்லை. ஆக அதிகமானோர் பாதிக்கப்பட்ட விக்டோரியா மாநிலத்தின் மெல்பர்ன் நகரில், முடக்கநிலை தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் அங்கு உணவகங்களிலும் மதுபானக் கூடங்களிலும் திரண்டுள்ளனர். விக்டோரியா மாநிலத்தில், 60 பேருக்கு இன்னும் கிருமித்தொற்று உள்ளது. அவர்களில் ஒருவருக்கு எவ்வாறு கிருமித்தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
Read More »ஆஸ்திரேலியா வெளிநாட்டினர் குடிவரவை குறைக்க வேண்டும்!
ஆஸ்திரேலியாவுக்கு மேலும் அதிகமான மக்கள் தேவையில்லை என 72 சதவீதமான பேர் கூறியுள்ளதாக தேசிய கருத்துக்கணிப்பின் முடிவு ஒன்று குறிப்பிட்டுள்ளது. அதில் 50 சதவதீம் பேர் வெளிநாட்டினர் குடிவரவை குறைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டமான அக்டோபர் மற்றும் நவம்பர் 2019ல் ஆஸ்திரேலிய மக்கள் தொகை ஆய்வு நிறுவனத்தால் நடத்தப்பட்ட இக்கருத்துக்கணிப்பு மூலம். அந்நாட்டில் பலர் மக்கள் தொகை பெருக்கத்தை விரும்பவில்லை எனச் சொல்லப்படுகின்றது. எங்கள் கருத்துக்கணிப்புகள் மூலமும் பிற கருத்துக்கணிப்புகள் மூலமும் நாங்கள் உறுதியாக சொல்கிறோம், வெளிநாட்டிலிருந்து வந்து ஆஸ்திரேலியாவில் ...
Read More »போராட்டக்காரரை தாக்கிய ஆஸ்திரேலிய அதிகாரி
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அகதிகள் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே அகதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடந்த நிலையில், ஆஸ்திரேலிய காவல் அதிகாரி ஒருவர் போராட்டக்காரரை தாக்கும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய சுமார் நூற்றுக்கணக்கான அகதிகள் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் கங்காரூ பாய்ண்ட் எனும் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முன்னதாக கடல் கடந்த தடுப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட்டவர்களாவர். இந்த சூழலில், அகதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடந்த பொழுது ஒரே அடியில் வீழ்த்தும் ...
Read More »இராட்சத சுறாக்கள் உலாவுவதை அறியாமல் நீச்சலில் ஈடுபட்ட மக்கள்!
அவுஸ்திரேலியாவில் இராட்சத சுறாக்கள் அருகே உலாவுவதை அறியாமல், பிரம்மாண்ட மீன் திரளுக்கு நடுவே பொதுமக்கள் சிலர் நீச்சலடித்த வீடியோவொன்று வெளியாகியுள்ளது. சிட்னியிலுள்ள போண்டி கடற்கரையோரம், சால்மன் வகை மீன்கள் மிகப்பெரிய அளவில் திரண்டிருந்த நிலையில், அவற்றுடன் சிலர் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது மீன்களை உண்பதற்கான 2 சுறாக்களும் அந்த பகுதியில் உலாவியதை ட்ரோன் கெமரா படம் பிடித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடப்பாண்டில் மாத்திரம் இதுவரை 21 சுறா தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More »மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது தாக்கிய சூறா
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து (Queensland) மாநிலத்தில் உள்ள Britomart பவளப்பாறையில் சூறா தாக்குதலுக்கு ஆளான ஆடவர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். ஈட்டியைக் கொண்டு மீன் பிடிக்கும் நடவடிக்கைக்குப் பிரபலமான அந்தப் பவளப்பாறையில், ஆடவர் இன்று, சிலருடன் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். சூறா மீன் அவரின் தொடைப்பகுதியைக் கடித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. கவலைக்கிடமாக உள்ள ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Read More »ஆஸ்திரேலிய அரசின் உத்தரவு: நிர்கதி நிலையில் அகதிகள்
கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதைத் போல ஆஸ்திரேலியாவின் சில மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது முடங்கிக் கிடந்த ஆஸ்திரேலிய மக்களிடையே மகிழ்வை ஏற்படுத்தி வருகின்றது. அதே வேளை, இந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அரசு எடுத்துள்ள மற்றொரு முடிவு ஆஸ்திரேலியாவின் சமூகத் தடுப்பில் உள்ள அகதிகளை நிர்கதி நிலைக்குத் தள்ளியிருக்கின்றது. இந்த பெருந்தொற்று சூழலில் சொந்த நாட்டு மக்களே அல்லாடி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் சமூகத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அகதிகள் அங்கிருந்து ...
Read More »