அவுஸ்திரேலியாவில் இராட்சத சுறாக்கள் அருகே உலாவுவதை அறியாமல், பிரம்மாண்ட மீன் திரளுக்கு நடுவே பொதுமக்கள் சிலர் நீச்சலடித்த வீடியோவொன்று வெளியாகியுள்ளது.
சிட்னியிலுள்ள போண்டி கடற்கரையோரம், சால்மன் வகை மீன்கள் மிகப்பெரிய அளவில் திரண்டிருந்த நிலையில், அவற்றுடன் சிலர் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது மீன்களை உண்பதற்கான 2 சுறாக்களும் அந்த பகுதியில் உலாவியதை ட்ரோன் கெமரா படம் பிடித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடப்பாண்டில் மாத்திரம் இதுவரை 21 சுறா தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal