அவுஸ்திரேலியாவில் மீண்டும் காடுகளில் விடப்படும் கோலா கரடிகள்!

அவுஸ்திரேலியாவில், காட்டுத் தீயினால்  படுகாயமடைந்த கோலா கரடிகள், சிகிச்சைக்குப் பின்னர், மீண்டும் காடுகளில் விடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கங்காரு தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 5,20,000 ஏக்கர் காடுகள் எரிந்து சாம்பலான நிலையில், கடுமையான தீ காயங்களுடன் 100 க்கும் மேற்பட்ட கோலா கரடிகள் மீட்கப்பட்டன.

 

காயங்களுக்கு மருந்திட்டு, சத்தான உணவு வகைகளை வழங்கி கரடிகளை பராமரிக்கும் விலங்கு நல ஆர்வலர்கள், காயங்கள் குணமடைந்ததும், மீண்டும் அவைகளை வனப்பகுதிகளில் விட்டு வருகின்றனர்.

கங்காரூ தீவில், கடந்த ஆண்டு 50,000 கோலா கரடிகள் இருந்த நிலையில், காட்டுத்தீயால் தற்போது 5000 கரடிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.