ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து (Queensland) மாநிலத்தில் உள்ள Britomart பவளப்பாறையில் சூறா தாக்குதலுக்கு ஆளான ஆடவர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
ஈட்டியைக் கொண்டு மீன் பிடிக்கும் நடவடிக்கைக்குப் பிரபலமான அந்தப் பவளப்பாறையில், ஆடவர் இன்று, சிலருடன் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார்.
சூறா மீன் அவரின் தொடைப்பகுதியைக் கடித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
கவலைக்கிடமாக உள்ள ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal