அவுஸ்திரேலியாவுக்கான சகல விசா விண்ணப்ப கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நிதிநிலை அறிக்கையின் கீழ் 5.4 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பின் மூலம் அரசுக்கு அடுத்த நான்கு வருடங்களில் 275 மில்லியன்கள் இலாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாக்கட்டண உயர்வு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச டீ-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு உலகெங்கிலுமுள்ள கிரிக்கெட் அணிகளிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருகைதரவுள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணி உத்தியோகத்தர்களுக்கான விசா விண்ணப்பத்தை கட்டணமில்லாமல் ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
அவுஸ்திரேலியாவில் கடுமையாக்கப்படும் புதிய சட்டம்!
அவுஸ்திரேலியா, சமூக ஊடக நிறுவனங்களுக்கான கடுமையான புதிய சட்டங்களை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. வன்முறை, பயங்கரவாதம் தொடர்பான பதிவேற்றங்களை உடனடியாக அகற்றத் தவறும் நிறுவனங்களைச் சேர்ந்தோருக்கு சிறை, பில்லியன் டாலர் அபராதம் ஆகிய தண்டனைகள் விதிக்கப்படலாம். நிறுவன ஊழியர்களுக்கு 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். சமூக ஊடக நிறுவனங்கள், அவற்றின் வருடாந்தர மொத்த வருமானத்தில் 10 விழுக்காட்டை அபராதமாக செலுத்த நேரிடலாம். வன்முறை, பயங்கரவாதம் தொடர்பான பதிவேற்றங்கள் எவ்வளவு விரைவாக அகற்றப்பட்டன என்பதன் அடிப்படையில் நீதிமன்ற விசாரணைக் குழு தண்டனையை ...
Read More »ஆஸ்திரேலிய தமிழ் அகதி புற்றுநோயால் பாதிப்பு!
இலங்கையில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக அந்நாட்டிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த சிவகுரு நவநீதராசா இரத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய அரசுக்கு தமிழ் ஏதிலிகள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. ராஜன் என நண்பர்களிடையே பரவலாக அறியப்படும் சிவகுரு நவநீதராசா, 2009 போருக்கு பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்திருக்கிறார். அப்போது அவரை கிறிஸ்துமஸ் தீவு முகாமில் தடுத்து வைத்த ஆஸ்திரேலிய அரசு, பின்னர் வில்லாவுட் தடுப்பு முகாமிற்கு மாற்றியது. அதன் பிறகு, ...
Read More »ஆஸ்திரேலியாவிலிருந்து கடல்வழியாக தப்பமுயன்ற பிரித்தானியர்!
ஆஸ்திரேலியாவிலிருந்து கடல்வழியாக பப்பு நியூ கினியாவுக்கு தப்பமுயன்ற 57 வயது பிரித்தானியரான டேவிட் ஜேம்ஸ் ஜேக்சன் ஆஸ்திரேலிய காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுபடகில் வில் அம்புடன் சுமார் 150 கி.மீ. பயணித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பப்பு நியூகினியாவுக்கு செல்ல 4 கி.மீ. மட்டுமே இருந்த சூழல் அவர் காவல்துறையிடம் சிக்கியிருக்கிறார். மேற்கு ஆஸ்திரேலியாவில் போதை மருந்து தொடர்பான வழக்கில் இவர் மீது ஏற்கனவே கைதாணை இருந்துள்ளது. இவ்வாறான சூழலில் தப்பிய ஜாக்சன், ஆஸ்திரேலியாவில் அவர் பயன்படுத்திய காரில், “நான் புதன்கிழமைக்குள் வரவில்லை ...
Read More »ஆஸ்திரேலியா பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்!
ஆஸ்திரேலியா அருகேயுள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலக கட்டிடங்களில் இருந்து வெளியேறினர். ஆஸ்திரேலியா அருகே பசிபிக்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூகினியா, நேற்று அங்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள நியூபிரிட்டன் தீவு அதிரடியாக குலுங்கியது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலக கட்டிடங்களில் இருந்து வெளியேறினர். பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அங்கு 6.1 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. ...
Read More »போர்க்குற்றங்களை விசாரிக்க அவுஸ்ரேலியா வலியுத்தல்!
கடுமையான மனித உரிமைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் இலங்கைப் பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயல்படுவதில் ஆஸ்திரேலிய ராணுவத்துக்கு எந்த தயக்குமும் இல்லை எனக்கூறியுள்ள ஆஸ்திரேலிய தூதர் ஜான் பிலிப், அதே சமயம், உள்நாட்டு போரின் போது இழைக்கப்பட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை முறையாக விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். “தற்போதைய சூழலில், இலங்கை முப்படையினருடன் இணைந்து செயல்படும் அணுகுமுறையை கொண்டிருக்கிறோம். போர் முடிந்த 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், எதிர்காலம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்,” என அவர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் கடற்படை கப்பல்கள் இலங்கைக்கு ...
Read More »அவுஸ்திரேலியாவில் பாலியல் தொழில் சட்டரீதியாக்கப்படவுள்ளதா?
தெற்கு அவுஸ்திரேலியாவில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அனுமதிப்பதற்கான சட்டத்திருந்தங்களை கொண்டுவருவதுதொடர்பான பேச்சுக்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மூத்த பாலியல் தொழிலாளர்கள் இருவர் அண்மையில் தெற்கு அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு சென்று கிறீன் கட்சியினரை சந்தித்து பேசியிருக்கிறார்கள். நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரண்டு பெண் பாலியல் தொழிலாளர்கள் பல வருடங்களாக பாலியல் தொழிலை மேற்கொண்டவர்கள். தற்போது இவர்கள் இருவரும் தாங்கள் பணிபுரிந்த துறையிலுள்ளவர்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் செயற்பாட்டாளர்களாக பங்களித்துவருகிறார்கள். அண்மையில் தெற்கு அவுஸ்திரேலிய நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் கிறீன் கட்சியினரை சந்தித்து அந்த மாநிலத்தில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதில் ...
Read More »சிட்னி விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்தில் திடீர் புகை- விமானங்கள் தரையிறக்கம்!
சிட்னி விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரத்தில் புகை வந்ததால், அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் திடீரென தரையிறக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சிட்னி விமான நிலையத்தில் இன்று காலை, கட்டுப்பாட்டு கோபுரத்தில் இருந்து திடீரென புகை வந்தது. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். கட்டுப்பாட்டு கோபுரத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தின் பணிகள், மெல்போர்னில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு மாற்றப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து புறப்படவேண்டிய அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டன. வெளியில் இருந்து வந்த ...
Read More »அவுஸ்திரேலிய மனைவியை 10 முறை கத்தியால் குத்தி கொலைசெய்தவருக்கு கிடைத்த தண்டனை!
அவுஸ்திரேலியாவில் மனைவியை கொலைசெய்த இந்திய நபருக்கு 25 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆண்களா பெண்களா மேன்மையானவர்கள் என்று நண்பர்களுடன் இடம்பெற்ற வாதத்தின்போது தனது மனைவியை குறித்த நபர் கொலை செய்துள்ளார். இந்த வாதத்தினால் கடுங்கோபமடைந்து சமையலறையில் போய் கத்தியை எடுத்துவந்து அவரை பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் குத்திக்கொலை செய்த இந்திய நபருக்கு விக்டோரிய உயர்நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த Douglas Derick Eustace என்ற 44 வயது நபருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தப்படுகொலை சம்பவம் மெல்பேர்ன் Hallam ...
Read More »மெல்பேர்ண் நகரில் திடீர் பதற்றம் !
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இருக்குமீ பிளாக்ராவ்(Flagstaff ) தொடருந்து நிலையத்தில் திடீர் பதற்றம் ஏற்படுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். பயணி ஒருவரிடம் துப்பாக்கி இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டு காவல்துறையினர் அதிரடியாக களமிறங்கினர். என்னவென்று தெரியாத நிலையில் பயணிகள் அச்சமடைந்தனர். சோதனையின்போது சந்தேக நபர் ஒரு தெருக்கலைஞர் எனத் தெரிவந்தது. அக்கலைஞர் கையில் இசைக்கருவி அடங்கிய பை இருந்துள்ளது. பயணிகளுக்கோ பைக்குள் துப்பாக்கியை மறைத்து வைதிருப்பதாக சந்தேகம் எழவே காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதேநேரம் இசைக் கலைஞர் இசை நிகழ்ச்சிக்காக தொடங்குமுன் மூச்சுப் பயிற்சி செய்துகொண்டிருந்தது ...
Read More »