ஆஸ்திரேலியா பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்!

ஆஸ்திரேலியா அருகேயுள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலக கட்டிடங்களில் இருந்து வெளியேறினர்.

ஆஸ்திரேலியா அருகே பசிபிக்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூகினியா, நேற்று அங்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள நியூபிரிட்டன் தீவு அதிரடியாக குலுங்கியது.

இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலக கட்டிடங்களில் இருந்து வெளியேறினர். பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
அங்கு 6.1 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. கான்டீரியன் கிழக்கே 186 கி.மீ தொலைவில் நியூபிரிட்டன் தீவை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம், உயிரிழப்பு மற்றும் காயம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பப்புவா நியூகினியா பசிபிக் பிராந்தியத்தில் நிலநடுக்க அபாய பகுதியில் உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.