அவுஸ்திரேலியாவில் விசா கட்டணங்களில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

அவுஸ்திரேலியாவுக்கான சகல விசா விண்ணப்ப கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிதிநிலை அறிக்கையின் கீழ் 5.4 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பின் மூலம் அரசுக்கு அடுத்த நான்கு வருடங்களில் 275 மில்லியன்கள் இலாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாக்கட்டண உயர்வு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச டீ-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு உலகெங்கிலுமுள்ள கிரிக்கெட் அணிகளிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருகைதரவுள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணி உத்தியோகத்தர்களுக்கான விசா விண்ணப்பத்தை கட்டணமில்லாமல் இலவசமாக வழங்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் இதற்காக 13 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேவேளை, இந்தோனேஸியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்து வேலை செய்ய விரும்புபவர்களுக்கான எண்ணிக்கையை அடுத்த வருடம் முதல் ஐயாயிரமாக உயர்த்தப்படவுள்ளது.

இந்த அதிகரிப்பு மூலம் அவுஸ்திரேலிய பொருளாதாரத்துக்கு 40.4 மில்லியன்வரையான மேலதிக பணத்தை ஈட்டமுடியும் என்றும் புதிய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.