அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்ரேலியா நோக்கி நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஹெட்போன் வெடித்ததால் பரபரப்பு

அவுஸ்ரேலியா நோக்கி நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயனர் ஒருவிரன் ஹெட்போன் வெடித்து சிதறிய சம்பவம் விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பீஜிங்கில் இருந்து மெல்போர்ன் நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் பேட்டரி மூலம் இயங்கும் ஹெட்போன் நடுவானில் பரபரப்பை ஏற்படுத்தியது. விமான பயணி ஒருவர் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்டு கொண்டிருந்த நிலையில் திடீரென ஹெட்போன் வெடித்த சம்பவம் விமான பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்மணியின் ஹெட்போன் நடுவானில் வெடித்து சிதறியதில் பெண்மணியின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. வெடித்த ...

Read More »

அவுஸ்ரேலியா உள்ளவர்கள் குடியேற்றப்பட்டவர்களே!

உலகில் உள்ள ஏழு கண்டங்களுள் ஒன்றக விளங்கும் சிறிய கண்டமாகக் காணப்படுவது அவுஸ்ரேலியா ஆகும். அதுமட்டுமல்லாது உலகின் மிகப்பெரிய தீவாகவும் காணப்படுகின்றது. எனினும் இங்கு வசிப்பவர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடியேற்றப்பட்டவர்கள் எனும் கருத்து நீண்ட காலமாக நிலவி வந்தது. இருந்த போதிலும் இதனை நிரூபிப்பதற்கான போதியளவு ஆதாரங்கள் காணப்பட்டிருக்கவில்லை. ஆனால் தற்போது தலை முடியிலுள்ள DNA இனைக் கொண்டு குடியேற்றம் செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இக் குடியேற்றமானது சுமார் 50,000 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு குழுவினரே குடியேற்றம் ...

Read More »

சிவப்பாக மாறிய ஏரி- மெல்போர்ன்

மெல்போர்ன் அருகே Westgate Park பகுதியில் அமைந்துள்ள உப்பு நீர் ஏரிதான் இவ்வாறு சிவப்பு நிறமாக மாறியுள்ளது. கோடை காலத்தில் ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக இங்குள்ள தண்ணீர் சிவப்பு நிறமாக மாறுவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மழையின் அளவு பெருமளவு குறைவதாலும் உப்பின் செறிவு மிக அதிகமாக இருப்பதாலும் குறித்த ஏரியில் தண்ணீர் பளபளக்கும் பிங்க் வண்ணத்திலோ அல்லது சிவப்பாகவோ மாறிவிடுகின்றன. மட்டுமின்றி இந்த ஏரியின் அடிப்பகுதியில் பரவிக்கிடக்கும் ஒருவகை ஆல்கேயானது இந்த மாயத்தை செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கோடை காலத்தில் உப்பின் ...

Read More »

அண்ணா இருக்கேன் எதுக்கும் கவலைப்படாதே!

அவுஸ்ரேலியாவில் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 4 மாத குழந்தைக்கு 3 வயதேயான அதன் சகோதரர் ஆதரவாக பேசிய பேச்சு அந்த குடும்பத்தினரை நெகிழச்செய்துள்ளது. அவுஸ்ரேலியாவின் மேற்கு பகுதியில் குடியிருந்து வருபவர் ஷெரைல் மற்றும் ஜோன் தம்பதிகள். இவர்களுக்கு வில்லியம்(3) மற்றும் தாமஸ் என இரு குழந்தைகள் உள்ளனர். இதில் 4 மாதங்களேயான தாமஸ் கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பெரும்பாலான நேரம் குழந்தை தாமசுடன் குடும்பத்தினர் அனைவரும் செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் விடுமுறையை கழிக்கும் பொருட்டு குழந்தையுடன் வெளியே புறப்பட்டுச் செல்ல தயாராகிக்கொண்டிருந்தனர் ஷெரைல் ...

Read More »

கோலி படத்தை விலங்குகளுடன் வைத்து போலிங் நடத்திய அவுஸ்ரேலியா மீடியா

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் படத்தை விலங்குகள் படத்துடன் வைத்து அவுஸ்ரேலியா மீடியா ஒன்று கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. 11 பேர் பீல்டிங் செய்ய, இரண்டு பேர் பேட்டிங் செய்யும் கிரிக்கெட் விளையாட்டை பொதுவாக ‘ஜென்டில்மேன் கேம்’ என்று அழைப்பார்கள். இந்த விளையாட்டில் சில நேரங்களில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் அது பெரும்பாலும் போட்டியின் உற்சாகத்தைப் பாதிக்காத வகையில் இருக்கும். இந்தியா- அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டியின்போது இரு அணி வீரர்களுக்கும் இடையில் அதிக அளிவில் ஸ்லெட்ஜிங் நடைபெற்றது. உச்சகட்டமாக ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இசை நிகழ்ச்சி!

லண்டனைச் சேர்ந்த முன்னணி இசைக்கலைஞர்களான MC.சாய், மற்றும் ரீஜே ஆகியோர் மெல்பேர்ன் வாழ் இசைக்கலைஞர் டியோவுடன் இணைந்து முதல்தடவையாக  அவுஸ்ரேலியாவில் இசை நிகழ்ச்சியொன்றை நடத்துகின்றனர். நாளை (10) வெள்ளிக்கிழமை மெல்பேர்னில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு தொடர்பில் அவர்களோடு ஒரு சந்திப்பு. Date: Friday 10th March, 2017 at 8pmVenue: Room 680, 680 Glenferrie Rd, Hawthorn.For more details contact Pak:0410 881 805/ Rath 0450 969 652  

Read More »

கைகளால் வரையப்பட்ட புதிய மெல்பேர்ன் வரைபடம்

சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்னர் கையால் வரையப்பட்ட மெல்பேர்ன் வரைபடத்தை வெளியிட்ட பெண் தற்போது மெல்பேர்னின் புதிய வரைபடத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். Melinda Clarke என்ற பெண் உலக சுற்றுப்பயணம் சென்று பல இடங்களின் வரைபடங்களைப் பார்த்தபோது மெல்பேர்னுக்கு இப்படியான வரைபடம் இல்லையே என யோசித்ததன் விளைவாக 1980களில் மெல்பேர்னின் கையால் கீறப்பட்ட வரைபடம் உருவாகியிருந்தது. Deborah Young  என்ற ஓவியரின் துணையுடன் Hot air பலூனில் மெல்பேர்ன் முழுவதும் பறந்து 7,500 க்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்து மெல்பேர்ன் வரைபடத்தை அவர் ...

Read More »

அவுஸ்ரேலியா செல்லும் கனவு கடல் நடுவில் கலைந்து போகும்!

நீங்கள் அல்லது உங்கள் அன்புக்குரிய ஒருவர் அவுஸ்ரேலியாவுக்கு குடியேற வழியொன்றைத் தேடுகின்றீர்களா? அதற்காக அவர் தெரிவுசெய்திருப்பது வியாபாரிகளால் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் படகின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுசெல்வதாகக் கூறும் மோசடியையா? அப்படியாயின் நீங்கள் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள். இதுவரை அவர்களுடன் அவுஸ்ரேலியாவுக்கு படகில் சென்ற எவரும் அங்கு காலடி எடுத்து வைத்ததில்லை. மேலும் அவர்கள் உருவாக்கித்தரும் கனவுக் கோட்டை அந்த படகுப் பயணத்தில் இல்லை. நீங்கள் இலட்சக்கணக்கில் பணம் செலவழித்துஇ சொத்துக்களை அடகுவைத்து, ஊர் உலகிற்கு கடனாளியாகி அவுஸ்திரேலிய கனவின் பின் சென்றாலும் அதை ஒருநாளும் உங்களால் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இலங்கையர் படுகொலை: 3 நேபாளிகள் கைது

தெற்கு அவுஸ்ரேலியாவில் இலங்கையர் ஒருவரை படுகொலை செய்ததாக நேபாள பிரஜைகள் மூவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 44, 48 மற்றும் 34 வயதானவர்கள் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட அடிலெய்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. காவல் துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், 39 வயதான குறித்த இலங்கையரின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர். இதேவேளை, சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எவரும் பிணை கோரி விண்ணப்பிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Read More »

ஊடகர் Trevor R. Grant அவர்கள் இன்று காலமானார்!

தமிழின ஆதரவாளரும் “Sri Lanka’s Secrets” என்ற நூலின் மூலம் சிங்கள இனவெறி அரசின் முகத்திரையைக் கிழித்தவரும் அவுஸ்திரெலியாவில் தனி மனிதனாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தவரும் சிறந்த ஊடகவியலாளருமான திரு.Trevor R. Grant அவர்கள் இன்று (6)புற்று நோயால் சாவடைந்துள்ளார். ஒரு கிரிக்கெட் வீரரான இவர் பின்னர் ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்வைத் தொடங்கினார். சிறிது காலம் தனது தொழிலில் விலகியிருக்க வேண்டிய நிலையேற்பட்ட போது ஏதிலிகள் தங்கியிருந்த இடங்களுக்கு உதவிப் பொருட்களை எடுத்துச் செல்லும் பார ஊர்திச் சாரதியாகப் ...

Read More »