அவுஸ்ரேலியா உள்ளவர்கள் குடியேற்றப்பட்டவர்களே!

உலகில் உள்ள ஏழு கண்டங்களுள் ஒன்றக விளங்கும் சிறிய கண்டமாகக் காணப்படுவது அவுஸ்ரேலியா ஆகும்.

அதுமட்டுமல்லாது உலகின் மிகப்பெரிய தீவாகவும் காணப்படுகின்றது. எனினும் இங்கு வசிப்பவர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடியேற்றப்பட்டவர்கள் எனும் கருத்து நீண்ட காலமாக நிலவி வந்தது.

இருந்த போதிலும் இதனை நிரூபிப்பதற்கான போதியளவு ஆதாரங்கள் காணப்பட்டிருக்கவில்லை.

ஆனால் தற்போது தலை முடியிலுள்ள DNA இனைக் கொண்டு குடியேற்றம் செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இக் குடியேற்றமானது சுமார் 50,000 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஒரு குழுவினரே குடியேற்றம் செய்யப்பட்டதாகவும், அவர்கள் பின்னர் கிழக்கு, மேற்கு எல்லைகளை நோக்கி நகர்ந்து வாழ்ந்தமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.