சிவப்பாக மாறிய ஏரி- மெல்போர்ன்

மெல்போர்ன் அருகே Westgate Park பகுதியில் அமைந்துள்ள உப்பு நீர் ஏரிதான் இவ்வாறு சிவப்பு நிறமாக மாறியுள்ளது. கோடை காலத்தில் ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக இங்குள்ள தண்ணீர் சிவப்பு நிறமாக மாறுவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மழையின் அளவு பெருமளவு குறைவதாலும் உப்பின் செறிவு மிக அதிகமாக இருப்பதாலும் குறித்த ஏரியில் தண்ணீர் பளபளக்கும் பிங்க் வண்ணத்திலோ அல்லது சிவப்பாகவோ மாறிவிடுகின்றன.

மட்டுமின்றி இந்த ஏரியின் அடிப்பகுதியில் பரவிக்கிடக்கும் ஒருவகை ஆல்கேயானது இந்த மாயத்தை செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கோடை காலத்தில் உப்பின் செறிவு அதிகரிக்க குறித்த ஆல்கே ஒருவகையான ரசாயனத்தை உற்பத்தி செய்வதாக தெரிய வந்துள்ளது.

ஏரி நீர் பளபளக்கும் வகையில் இருந்தாலும் உள்ளூர் மக்களுக்கோ அல்லது சுற்றுலாப்பயணிகளுக்கோ நேரிடையாக அந்த தண்ணீரை தொட அனுமதி இல்லை.

அழகை மட்டுமே ரசிக்கலாம் நேரிடையாக தண்ணீரை தொட வேண்டாம் என Westgate Park நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் மிருகங்களுக்கோ பறவைகளுக்கோ எந்த ஆபத்தும் இல்லை எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் உருமாறும் தண்ணீரை தொடுவதால் அபாயகரமான பாதிப்பு எதுவும் இல்லை என்றபோதும் தண்ணீரை தொட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

கோடையின் தாக்கம் குறைந்ததும் ஏரியானது மீண்டும் நீல வண்ணத்தில் மாறிவிடும். மெல்போர்ன் நகரில் மட்டுமல்ல, துருக்கியின் துஷ் குளு ஏரி, ஸ்பெயின் நாட்டின் Salina de Torrevieja, கனடாவில் உள்ள Dusty Rose ஏரி மற்றும் செனிகலில் அமைந்துள்ள Lake Retba ஆகிய ஏரிகள் கோடை காலங்களில் இதுபோன்று நிறம் மாறும் தன்மை கொண்டவை.