ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்து வரப்பட்ட அகதிகள் ஆஸ்திரேலிய ஹோட்டல்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 65 அகதிகள் வேறொரு ஹோட்டலுக்கு இடமாற்றப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. “முந்தைய ஹோட்டலில் ஜன்னல் இருந்தது. அதன் மூலம் வெளியில் எங்கள் பார்த்து புன்னகைப்பதையும் கையசைப்பதையும் பார்க்க முடிந்தது. இப்போதைய ஹோட்டலில் எந்த ஜன்னலும் இல்லை,” எனக் கூறியிருக்கிறார் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ள அகதியான Mostafa Azimitabar. ஆப்கானிஸ்தானின் ஏகாதிபத்திய போரிலிருந்து, இலங்கையின் இனப்படுகொலைப் போரிலிருந்து, ஈரானிலிருந்து என உலகின் பல நாடுகளில் ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
விக்டோரியாவில் காணாமல்போன தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஆபத்தான நிலையில் மீட்பு!
அவுஸ்திரேலியாவில் விக்டோரியாவின் மேற்குப் பகுதியிலுள்ள Colac-Lavers Hill வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது காணாமல்போன இலங்கையைச் சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Boxing day அன்று Delahey பகுதியைச் சேர்ந்த 30 வயதான இந்நபரும் அவரது நண்பரும் வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் Colac-Lavers Hill வீதியால் சென்றுகொண்டிருந்ததாகவும் இரவு 8 மணியளவில் இருவரும் வெவ்வேறாக பிரிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நீண்டநேரமாகியும் தனது நண்பர் குறிப்பிட்ட இடமொன்றிற்கு வராததையடுத்து அச்சமடைந்த சக நண்பர் அவசர சேவைகள் பிரிவுக்கு அறிவித்துள்ளார். ...
Read More »2021 ஒக்டோபருக்குள் கொரோனா மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும்-அவுஸ்திரேலியா
அடுத்தவருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் கொரோனா வைரஸ் மருந்தினை விநியோகிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும் என அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சர் கிரேக் ஹன்ட் தெரிவித்துள்ளார். சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே மருந்து வழங்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலியா கொரோனா வைரசிற்கான மருந்துகளிற்கு அனுமதிவழங்கும் நடைமுறையை நோக்கி உரிய வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாத முடிவிற்குள் அவுஸ்திரேலியாவில் கொரோனா மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலவசமாக, சுயவிருப்பத்தின் அடிப்படையில் அனைவருக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும் என ...
Read More »அவுஸ்திரேலியாவில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஆற்றில் மூழ்கிப் பலி
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா- நியூ சவுத் வேல்ஸ் மாநில எல்லையிலுள்ள Liparoo அருகே தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் ஆற்றில் மூழ்கிப் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி பழுகாமத்தைச் சேர்ந்த சோ.திசாந்தன் என்ற 28 வயது இளைஞரே இவ்வாறு பலியானவர் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர். புகலிடம்கோரி அவுஸ்திரேலியா வந்த திசாந்தன் குயின்ஸ்லாந்து, சிட்னி போன்ற இடங்களில் வசித்த பின்னர் அண்மையில் விக்டோரியாவில் குடியேறியதாக குறிப்பிடப்படுகிறது. நத்தார் தினத்தன்று தனது நண்பர்களுடன் Murray ஆற்றுக்குச் சென்றிருந்த இவர் அங்கு நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாகவும், பாரிய தேடுதல் ...
Read More »ஆஸ்திரேலியாவின் பேட்டிங் மிகவும் வலுவானது அல்ல: ஸ்ரீகாந்த்
ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மிகப்பெரிய அளவில் ஸ்மித், டேவிட் வார்னரை நம்பியே இருக்கிறது என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டரை இந்தியாவின் பந்து வீச்சு அசைத்துவிடுமா? என்பதுதான் பேச்சு பொருளாக இருந்தது. ஆனால், அடிலெய்டு டெஸ்டில் இந்தியா 244 ரன்கள் எடுத்தபோது, ஆஸ்திரேலியா 191 ரன்னில் சுருண்டது. மெல்போர்ன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. இருந்தாலும் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் மிகவும் வலுவானது எனக்கூற முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீகாந்த் ...
Read More »லொட்டரியில் 147 கோடி பரிசாக வென்ற மாணவன்
டிசம்பர் 17-ல் நடத்தப்பட்ட பவர்பால் ஜாக்பாட் என்ற லொட்டரியிலேயே அதிர்ஷ்டம் அந்த மாணவனை தேடி வந்துள்ளது. இனி கல்வியும் தற்போது செய்து வரும் வேலையையும் விட்டுவிட வேண்டும் என தெரிவித்துள்ள அந்த மாணவன், எஞ்சிய காலம் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். வியாழனன்று இரவு லொட்டரியில் பரிசு விழுந்ததாக தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், இவ்வளவு பெரிய தொகை என்பதை அறிந்ததும், நம்ப முடியவில்லை எனவும், உடனையே பெற்றோருக்கு தகவல் தர அழைத்த போது அவர்கள் தூக்கத்தில் இருந்ததால் விடிந்ததும் தகவல் தெரிவித்ததாக கூறியுள்ளார். ...
Read More »எங்களை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா
“மனுஸ்தீவில் இருந்ததை விட இங்கு(ஆஸ்திரேலியாவில்) மோசமாக இருக்கிறது. ஒரு மணிநேர ஜிம்- அது மட்டுமே நான் அறையை விட்டு வெளியில் அனுமதிக்கப்படும் நேரம். அவர்கள்(ஆஸ்திரேலிய அரசு) எங்களை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்,” எனக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சோமாலிய அகதியான இஸ்மாயில் ஹூசைன். “கடந்த சில வாரங்களாக யாரும் அறைகளை விட்டு வெளியில் வரவில்லை. அவர்கள் போராட்ட மனநிலையில் வெளியில் வராமல் இல்லை, நம்பிக்கையின்மையால்- மனச் சோர்வினால் வெளியில் வராமல் இருக்கிறார்கள்,” என்கிறார் ஹூசைன். ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 200 அகதிகள் தொடர்ந்து அங்கும் சிறைவைக்கப்பட்டுள்ளது குறித்து இக்கருத்தை சோமாலிய அகதி தெரிவித்திருக்கிறார்.
Read More »எதிர்கால கப்டனுக்கு ஸ்மித் மட்டுமே
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு ஸ்மித் மட்மே எதிர்கால கேப்டன் என்ற நிலை இல்லை என அந்நாட்டு கிரிக்கெட் போர்டு சேர்மன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆரோன் பிஞ்ச், டெஸ்ட் அணி கேப்டனாக டிம் பெய்ன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். டெஸ்ட் அணிக்கு ஸ்மித்தை கேப்டனாக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. டிம் பெய்னும் கேப்டன் பதவி குறித்து யோசிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஸ்மித் மட்டுமே கேப்டனுக்கான ஆப்சனில் இல்லை என அந்நாட்டு கிரிக்கெட் போர்டின் ...
Read More »அகதிகளுக்கு பிறந்த குழந்தைகளை பிரித்து வைத்திருக்கும் ஆஸ்திரேலிய கொள்கை
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயற்சித்து நவுருத்தீவில் உள்ள கடல் கடந்த தடுப்பில் சிறைவைக்கப்பட்ட அகதிகளுக்கு பிறந்த சுமார் 170 குழந்தைகள் நிச்சயமற்ற நிலையை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதில் 125 குழந்தைகள் ஆஸ்திரேலியாவிலும் மற்ற குழந்தைகள் கடல் கடந்த தடுப்பு தீவுகளிலும் பிறந்தவை எனக் கூறப்படுகின்றது. இவ்வாறு சமீபத்தில் எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளனர் அல்லது இக்குழந்தைகளில் எத்தனை பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்ற தகவலை வழங்க ஆஸ்திரேலிய உள்துறை மறுத்திருக்கிறது. நவுரு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அகதிகளுக்கு சுமார் 7 ஆண்டுகாலத்தில் பிறந்த இக்குழந்தைகள் ஆஸ்திரேலிய படகு ...
Read More »ஆஸ்திரேலியா: தொண்டு அமைப்புகளின் உதவிகளை நாடும் தஞ்சக்கோரிக்கையாளர்கள்
கொரோனா பெருந்தொற்று சூழல் தொடங்கிய பொழுது, அரசு உதவிகளிலிருந்து தவிர்க்கப்பட்ட சுமார் 1 லட்சம் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வீடற்ற நிலையையும் பசியையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும் என தொண்டு அமைப்புகள் எச்சரிந்திருந்த நிலையில் புதிய கருத்துக்கணிப்பு ஒன்று அதனை நிரூபணமாக்கியுள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் நடத்திய ஆய்வில் 3,500 தஞ்சக்கோரிக்கையாளர்கள் தொண்டு அமைப்புகளின் உதவிகளை நம்பியிருப்பதாகவும் அதில் 70 சதவீதமானோர் போதிய உணவின்றி தவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் படி, சுமார் 14 சதவீதமானோர் வீடற்ற நிலையையும் எதிர்கொண்டுள்ளனர். அதே சமயம், ...
Read More »
Eelamurasu Australia Online News Portal