ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மிகப்பெரிய அளவில் ஸ்மித், டேவிட் வார்னரை நம்பியே இருக்கிறது என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டரை இந்தியாவின் பந்து வீச்சு அசைத்துவிடுமா? என்பதுதான் பேச்சு பொருளாக இருந்தது. ஆனால், அடிலெய்டு டெஸ்டில் இந்தியா 244 ரன்கள் எடுத்தபோது, ஆஸ்திரேலியா 191 ரன்னில் சுருண்டது.
மெல்போர்ன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. இருந்தாலும் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் மிகவும் வலுவானது எனக்கூற முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில் ‘‘விராட் கோலியை நீங்கள் மிஸ் செய்யும்போது, உண்மையைச் சொல்லப்போனால், அது இந்திய அணிக்கு கடினமாக இருக்கும். அதேபோல் ஷமியும் இல்லை. இருந்தாலும் இந்திய அணி கடும் சவாலாக இருப்பார்கள். எல்லோருமே ஏமாற்றம் அடைந்தார்கள். ஆனால் ஒவ்வொருவரும் அதை கெட்ட கனவாக எடுத்துக் கொண்டார்கள்.