“மனுஸ்தீவில் இருந்ததை விட இங்கு(ஆஸ்திரேலியாவில்) மோசமாக இருக்கிறது.
ஒரு மணிநேர ஜிம்- அது மட்டுமே நான் அறையை விட்டு வெளியில் அனுமதிக்கப்படும்
நேரம்.
அவர்கள்(ஆஸ்திரேலிய அரசு) எங்களை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்,”
எனக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சோமாலிய
அகதியான இஸ்மாயில் ஹூசைன்.
“கடந்த சில வாரங்களாக யாரும் அறைகளை விட்டு வெளியில் வரவில்லை.
அவர்கள் போராட்ட மனநிலையில் வெளியில் வராமல் இல்லை,
நம்பிக்கையின்மையால்- மனச் சோர்வினால்
வெளியில் வராமல் இருக்கிறார்கள்,” என்கிறார் ஹூசைன்.
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக
ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 200 அகதிகள் தொடர்ந்து
அங்கும் சிறைவைக்கப்பட்டுள்ளது குறித்து இக்கருத்தை சோமாலிய அகதி
தெரிவித்திருக்கிறார்.
Eelamurasu Australia Online News Portal